கோடைக்கால மேக் அப் டிப்ஸ்
Page 1 of 1
கோடைக்கால மேக் அப் டிப்ஸ்
கோடையில் வியர்வையினால் வேர்க்குரு உள்ளிட்ட சரும கோளாறுகள் ஏற்படும். முகத்தில் எண்ணெய் வடியும். கோடைகாலத்திற்கு ஏற்ற எளிய மேக் அப் டிப்ஸ் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
• கோடை காலத்தில் மேக் அப் போடும் போது அடர்த்தியாக பவுண்டேசன் போடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது வியர்த்து முகத்தில் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடும்.
• கண்களில் அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்மைக்கு பங்குண்டு. காலை நேரத்தில் லைட்டாகவும், மாலை நேரத்தில் திக் லைனாகவும் போடுவது கண்களுக்கு கூடுதல் கவர்ச்சி தரும்.
• கோடையில் லிப்ஸ்டிக்கிற்கு பை சொல்லிவிடுங்கள். உதடுகளுக்கு அழகு தருபவை லிப் கிளாஸ்தான். உடைகளுக்கும், சருமத்திற்கும் ஏற்ற லிப்க்ளாஸ் உபயோகியுங்கள்.
• கோடையில் பன்னீர், ரோஸ்வாட்டர் குளுமை தரும். சருமத்தில் அடைந்துள்ள அழுக்குகளை நீக்க சிறிதளவு பருத்து துணியில் ரோஸ்வாட்டரை நனைத்து முகத்தை துடைத்தால் அழுக்குகள் நீங்கிவிடும். சருமம் புத்துணர்ச்சியோடு திகழும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மேக் அப் டிப்ஸ்
» கோடைக்கால முக பராமரிப்பு
» எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்
» அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்
» கண்களை களையாக மாற்றும் மேக் அப் டிப்ஸ்
» கோடைக்கால முக பராமரிப்பு
» எண்ணெய் பசை சருமத்திற்கு மேக்-அப் டிப்ஸ்
» அழகை அதிகரித்து காட்டும் மேக் அப் டிப்ஸ்
» கண்களை களையாக மாற்றும் மேக் அப் டிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum