தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்

Go down

வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்  Empty வெயிலுக்கு பயந்து வெளிநாட்டுக்கு பயணமாகும் நடிகைகள்

Post  ishwarya Mon May 27, 2013 6:02 pm



சென்னையில் அக்னி வெயில் வறுத்தெடுக்கிறது. இதனால் நடிகர், நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பல நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர். இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கு சூட்டிங்கை மாற்றும்படி நிர்ப்பந்தித்து அங்கே ஓடுகிறார்கள். வெயில் கொடுமை குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது:-

சென்னையில் வெயில் கடுமையாக உள்ளது. ஐதராபாத்திலும் இதேபோல் வெயில் கொளுத்துகிறது. நல்ல வேளையாக ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்துகின்றனர். எனவே வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க நான் சுவிட்சர்லாந்து செல்கிறேன். அங்கு இம்மாதம் இறுதிவரை தங்கி ஓய்வெடுப்பேன். வெயில் குறைந்த பிறகு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

வெயில் பற்றி சமந்தா சொல்லும்போது, வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க நான் ஸ்பெயின் நாட்டுக்கு செல்கிறேன். அங்கு கோடை விடுமுறையை கழிப்பேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் படங்களில் நடித்தேன். புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருந்தேன். இப்போது ஓய்வு கிடைத்துள்ளது. எனவே ஸ்பெயினுக்கு போகிறேன். கோடையை ஜில் என்று கழிக்க செல்கிறேன். இந்த மாதம் இறுதியில்தான் ஊருக்கு திரும்புவேன். அதன் பிறகு பவன் கல்யாணுடன் தெலுங்கு படத்தில் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். நடிகை சார்மி கூறும்போது, வெயிலில் இருந்து தப்பிக்க அமெரிக்கா செல்கிறேன் என்றார். அங்கு தெலுங்குகாரர்கள் நடத்தும் பண்டிகையொன்று நடைபெற உள்ளது. அப்பண்டிகையில் பங்கேற்று விட்டு அமெரிக்காவிலேயே கோடை விடுமுறையை கழிப்பேன் என்றார்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum