பழைய புடவைகளை மாற்றி புதிதாக பயன்படுத்த வழி
Page 1 of 1
பழைய புடவைகளை மாற்றி புதிதாக பயன்படுத்த வழி
அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக டிசைன் செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான டிசைன்களை இணைத்துகூட, புதிய டிசைன் புடவை உருவாக்கலாம். அதனால் பணச்செலவு மிச்சமாகும்.
புதிய டிசைன் புடவைகளும் கிடைக்கும். இரண்டு `ஸ்டைல்'களை கலந்தும் புதிய ஸ்டைல் உருவாக்கலாம். அப்படி உருவானது `காக்ரா சாரி`. இதன் முன்பகுதி காக்ரா மாதிரி இருக்கும். பின் பகுதி புடவைபோல் தோன்றும். `தாவணி ஸ்டைல்' புடவையில் ஒரு புடவை இரு கலராகத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் பாவாடை- தாவணி அணிந்திருப்பதுபோல் தோன்றும்.
புடவை கட்டும்போது அவிழ்ந்துவிடுமோ என்று டீன்ஏஜ் பெண்கள் பயப்படவேண்டியதில்லை. பாவாடை கட்டுவதுபோல் நாடா இணைத்துள்ள புடவைகளும் அறிமுகமாகிவிட்டன'' உடை கலாசாரத்தை எடுத்துக்கொண்டால் மொத்தம் 6 விதங்கள் இருக்கின்றன.
அவை: கிளாசிக் அண்ட் டிரடீஷனல் (பட்டு போன்ற பளிச்சென்ற பாரம்பரிய அழகு ஆடைகளில் இவர்கள் ஆர்வம் கொண்டவர்கள்), எலிகண்ட் ஸ்டைல் (துல்லியமான அளவில் தைத்து, நேர்த்தி குறையாமல் அணிபவர்கள் இவர்கள்), பெமினைன் ஸ்டைல் (இளம் நிறத்திலான உடைகளை தேர்வு செய்பவர்கள்.
பெரும்பாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்), கிளாமரஸ் பிரிவு (பளிச்சென்ற ஜிகினா ஸ்டைல் உடைகளில் ஆர்வம் கொள்பவர்களுக்கான வகை), டிரமாட்டிக் ஸ்டைல் (இந்த வகை உடைகளில் ஒரு நாடகம் அரங்கேறியதுபோல் காட்சிகள் இருக்கும். இந்த வகை உடைகள் எல்லோரது பார்வையையும் சுண்டி இழுக்கும்), கிரியேட்டிவ் ஸ்டைல் (இவர்கள் தங்கள் கற்பனைக்கு தக்கபடி புதிதாக ஆடைகளை வடிவமைத்து கேட்பவர்கள்).
ஒரு பெண் இந்த 6 வகை உடைகளில் எதில் கவனம் செலுத்துகிறாரோ அதை வைத்து அவர் டேஸ்ட், குணங்களை கணித்துவிடலாம். தமிழ் நாட்டில் கிளாசிக்கல் அண்ட் டிரடீஷனல் உடைகளை தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். அடுத்த இடத்தில் எலிகண்ட் ஸ்டைல் இருக்கிறது என்று வகை வகையாய் உடைகளை வைத்தே பெண்களின் குணங்களை கணித்து சொல்கிறார், பேஷன் தபு
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விதியை மாற்றி அமை!!!
» தலையெழுத்தை மாற்றி அமைத்த திருப்பட்டூர் பிரம்மா ஆலயம்
» கதைக்களமே புதிதாக இருக்கும் ‘கழுகு’?!
» புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவிலில் அஜித்
» தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் புதிதாக எலும்புகள் உருவாகும்
» தலையெழுத்தை மாற்றி அமைத்த திருப்பட்டூர் பிரம்மா ஆலயம்
» கதைக்களமே புதிதாக இருக்கும் ‘கழுகு’?!
» புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவிலில் அஜித்
» தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் புதிதாக எலும்புகள் உருவாகும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum