சரும அழகை பாதுகாக்கும் வினிகர்
Page 1 of 1
சரும அழகை பாதுகாக்கும் வினிகர்
சரும அழகை பாதுகாப்பதில் வினிகர் முக்கிய பங்கு வகிக்கிறது. பனிக்காலத்தில் வினிகர் பயன்படுத்தினால் சரும வறட்சி நீங்கும், சருமம் புத்துணர்ச்சியடையும்.
• ஆப்பிள் சிடர் வினிகர் அல்லது வெள்ளை வைன் வினிகர் சிறந்த முகத்திற்கு க்ளன்சராக செயல்படுகிறது. ஆரஞ்சு பழத்தின் சாறு எடுத்து அதனுடன் சம அளவு வினிகரை சேர்த்து கலக்கவும். இதனை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். எங்காவது வெளியில் போய்விட்டு வந்தாலோ, மேக் அப் போடும் முன்போ இந்த கலவையை உபயோகித்து முகத்தை சுத்தம் செய்யலாம். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
• பப்பாளி பழத்தின் சதையை எடுத்து நன்கு கூழாக்கி அதனுடன் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலக்கவும். இந்த கலவை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது சிறிய காட்டன் துணியில் தொட்டு உபயோகிக்கலாம். இது சிறந்த டோனராக செயல்படும்.
• குளிக்கும் நீரில் சில துளிகள் வினிகரை கலந்து குளித்தால் வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொன்று சருமத்தை புத்துணர்ச்சியாகும்.
• தலையில் பொடுகுத் தொல்லை இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை தலையில் தடவி, சில நிமிடங்கள் கழித்து நன்கு அலசிக் குளித்தால் பொடுகு போய்விடும். ஷாம்பு போட்டு தலைகுளித்தபின் சிறிதளவு வினிகர் கலந்த நீரினால் அலசினால் முடிபட்டுப் போலாகும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முக அழகை பாதுகாக்கும் சோற்றுக் கற்றாழை: சில குறிப்பு.
» சரும அழகை காக்கும் க்ரீன் டீ
» வினிகர் பேஸ்மாஸ்க்
» பனிக்காலத்திற்கு ஏற்ற வினிகர் பேஸ்மாஸ்க்!
» சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்:
» சரும அழகை காக்கும் க்ரீன் டீ
» வினிகர் பேஸ்மாஸ்க்
» பனிக்காலத்திற்கு ஏற்ற வினிகர் பேஸ்மாஸ்க்!
» சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum