தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சருமத்தை மென்மையாக்கும் பட்டர்

Go down

 சருமத்தை மென்மையாக்கும் பட்டர் Empty சருமத்தை மென்மையாக்கும் பட்டர்

Post  meenu Mon Jan 28, 2013 1:42 pm



தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் போல தேங்காய் பால் கூந்தலை பாதுகாக்க உதவுகிறது. தேங்காய்பால் கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு உதிராமல் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தேங்காய் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், பொட்டாசியம், போலேட் போன்றவை காணப்படுகின்றன.

தலைமுடிக்கு ஏற்றவாறு தேங்காய் பால் எடுத்து கொள்ள வேண்டும்.பின்னர் தலையை சுத்தமாக அலசி காயவைத்து பின்னர் தேங்காய் பாலை மெதுவாக வேர்கால்களில் படுமாறு அப்ளை செய்யவேண்டும். தண்ணீர் போல இருப்பதால் பூசிய உடன் நன்கு கவர் போட்டு கூந்தலை கட்டிவிட வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.

இதனால் தேங்காய் பாலில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் தலையில் தங்கிவிடும். இரண்டு நாள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம். தேங்காய் பால் தேய்த்து குளிப்பதால் தலையில் இருந்து அதிக அளவில் முடி கொட்டுவது கட்டுப்படும்.

தலையில் புதிய முடிகள் உருவாகும். நீளமான கூந்தல் கிடைக்கும். மென்மையாகவும், பளபளப்பாகவும் கூந்தல் மாறும். வாரம் ஒருமுறை தேங்காய்பாலில் தலை குளிப்பதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதனால் அழகான, ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum