தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சருமத்தை மென்மையாக்கும் "நேச்சுரல் பட்டர்ஸ்"!!!

Go down

சருமத்தை மென்மையாக்கும் "நேச்சுரல் பட்டர்ஸ்"!!! Empty சருமத்தை மென்மையாக்கும் "நேச்சுரல் பட்டர்ஸ்"!!!

Post  ishwarya Fri Feb 08, 2013 1:26 pm

Body Butter
அழகாக இருப்பதற்கு முகம் மட்டும் அழகாக இருந்தால் போதாது. உடல் முழுவதும் அழகாக இருக்க வேண்டும். அதற்கு சரியான முறையான உடல் மற்றும் சருமப் பராமரிப்பானது தேவைப்படுகிறது. ஆகவே அவ்வாறு சருமத்தை மென்மைப்படுத்த பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் பட்டர் மிகவும் சிறப்பான பொருள். ஏனெனில் அவை சருமத்தில் நீண்ட நேரம் ஈரப்பசையை வைத்திருக்கும். இதனால் சருமத்தில் இருக்கும் திசுக்கள் மென்மையடைவதோடு, சருமத்திற்கு அழகையும் தருகிறது. மேலும் சருமத்தை ஈரப்பசையோடு வைத்திருக்க கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பட்டரை பயன்படுத்துவதை விட, இயற்கையில் கிடைக்கும் பட்டரை பயன்படுத்தினால் சருமத்திற்கு எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது. இப்போது எந்த பட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுவதை சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

ஷியா பட்டர்

* முதலில் அரை கப் ஷியா பட்டரை எடுத்துக் கொண்டு, அதில் 5-6 துளிகள் ஆமணக்கெண்ணெயை விட்டு கலந்து. அதனை உடல் முழுவதும் தடவினால், சருமத்திற்கு ஒருவித உற்சாகம் கிடைத்த மாதிரியான உணர்வை உணரலாம்.

* வேண்டுமென்றால் அரை கப் கற்றாழை ஜெல் மற்றும் ஷியா பட்டரை எடுத்து கலந்து உடலுக்கு தடவினால், சருமமானது நன்கு மென்மையாக இருக்கும்.

* முகத்தில் வெடிப்புகள் இருப்பவர்கள், 7-8 துளிகள் தேங்காய் எண்ணெய், 5-6 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் அரை கப் ஷியா பட்டரை எடுத்துக் கொண்டு நன்கு கலந்து, உடலில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

* ஒரு நல்ல வாசனையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், 7-8 துளிகள் லாவண்டர் எண்ணெயை, பட்டருடன் விட்டு, உடலுக்கு தேய்க்கலாம். இதனால் அந்த நாள் முழுவதும் ஒரு நல்ல மணம் இருக்கும்.

கொக்கோ பட்டர்

* ஒரு அரை கப் கொக்கோ பட்டருடன் 10 துளிகள் ஆலிவ் ஆயிலை விட்டு கலந்து உடலுக்கு தடவி வந்தால், சருமமானது மென்மையாவதோடு, வறண்ட சருமமானது போய்விடும்.

* மற்றொரு சிறந்த வறட்சியை போக்கும் முறை என்னவென்றால், 6-7 துளிகள் திராட்சை விதையால் ஆன எண்ணெய், 7-8 துளிகள் ஆப்ரிகாட் கர்னல் எண்ணெய் மற்றும் அரை கப் கொக்கோ பட்டரை கலந்து, தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமமானது பொலிவுடன் காணப்படும்.

* இல்லையென்றால் அரை கப் கொக்கோ பட்டருடன், 10 துளிகள் ரோஸ் வாட்டர் மற்றும் 6 துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து கலந்து தடவலாம்.

மேற்கூறியவாறெல்லாம் பயன்படுத்தினால் சருமமானது அழகாக மின்னுவதோடு, மென்மையாகவும் மாறும். மேலே சொன்ன அனைத்து விதமான பட்டர்களும், காஸ்மெட்டிக் கடைகளில் கிடைக்கும். மேலும் மேலே சொன்ன கலவையை நீண்ட நாட்கள் சேமிக்கவும் முடியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum