தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரல்கள் அழகாக்கும் மசாஜ்

Go down

விரல்கள் அழகாக்கும் மசாஜ் Empty விரல்கள் அழகாக்கும் மசாஜ்

Post  meenu Mon Jan 28, 2013 12:50 pm

பொதுவாக தலை, கழுத்து போன்ற பகுதிகளில் தான் மசாஜ் செய்வோம். ஆனால் கை, கால் விரல்களும் முக்கியதுவம் கொடுக்க மாட்டோம். கை மற்றும் விரல்களுக்கு மசாஜ் செய்வதால் உடல் ரிலாக்ஸாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. முதலில் சிறிது எண்ணெய்யையோ அல்லது கைகளுக்கு தடவும் லோஷனையோ கைகளில் தடவவும்.

பின் மெதுவாக அந்த எண்ணெய்யோ அல்லது லோஷனையோ தோலில் ஊடுருவு‌ம் வரை ந‌ன்கு மசா‌ஜ் செ‌ய்ய வே‌ண்டு‌ம். அதன் பிறகு வைட்டமின் ஈ உள்ள எண்ணெய்யை எடுத்து கை, விரல்களில் தடவி மசாஜ் செய்யவும். முக்கியமாக மணிக்கட்டு, உள்ளங்கை ஆகிய இடத்தில் நன்கு மசாஜ் செய்யவும்.

மசாஜ் செய்யும் போது ஒவ்வொரு விரல்களுக்கிடையேயும் பெருவிரலை மெதுவாக விட்டு விட்டு செய்ய வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர உடல் ரிலாக்சாக இருக்கும்.

விரல்களில் இருக்கும் நரம்புகள் மணிக்கட்டுகளில் இணைவதால் மணிக்கட்டில் மசாஜ் செய்வது புத்துணர்ச்சியைத் தரும். மேலும் இந்த மாதிரியான மசாஜை செய்து முறையாக‌ப் பராம‌ரி‌‌த்து வ‌ந்தா‌ல் தா‌ன் நக‌ங்களு‌ம் அழகாக‌வும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum