வாரம் ஒரு முறை சரும பராமரிப்பு...
Page 1 of 1
வாரம் ஒரு முறை சரும பராமரிப்பு...
வாரம் முழுக்க சருமத்தில் சேர்ந்த அழுக்கை ஸ்க்ரப் உபயோகித்து அகற்ற வேண்டும். அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப கிரீம் அல்லது ஜெல் வடிவ ஸ்க்ரப்பில் சிறிது எடுத்து, முகத்தில் தடவி, வட்ட வடிவமாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். அடுத்து டோனர் உபயோகித்து, ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பழச்சாறு அல்லது பழக்கூழுடன் கலந்து முகத்தில் தடவிக் காய விட்டுக் கழுவலாம்.
சிலருக்கு தினம் தலை குளிக்க வேண்டும். தினம் ஷாம்பு போட்டுக் குளிப்பதும் தவறு. சும்மா குளிப்பதும் கூடாது. 3 நாள்களுக்கு ஒரு முறை மிதமான ஷாம்பு உபயோகித்துக் குளிக்கலாம். ஷாம்பு குளியலுக்குப் பிறகு கட்டாயம் கண்டிஷனர் உபயோகித்து (முடிக்கு மட்டும். மண்டையில் படக் கூடாது), 2 நிமிடங்கள் விட்டு, அலச வேண்டும்.
தலைக்கும் உடம்புக்கும் எண்ணெய் வைத்து, 1 மணி நேரம் ஊறி, மைல்டான ஷாம்பு அல்லது மூலிகை சீயக்காய் பொடி உபயோகித்துக் குளிப்பதன் மூலம், உடல் சூடு தணியும். சருமம் பளபளப்பாகும். நாம் பெரும்பாலும் கால்களுக்கு செருப்புதான் அணிகிறோம். மிகச் சுலபமாக விரல் இடுக்குகளில் அழுக்குச் சேரும். பொறுக்கும் சூடுள்ள தண்ணீரில் கல் உப்பு, கொஞ்சம் ஷாம்பு கலந்து, கால்களை ஊற வைக்கவும்.
நெயில் பிரஷ் மூலம் நகங்களைச் சுத்தப்படுத்தவும். பியூமிஸ் ஸ்டோனால் பாதங்களைத் தேய்த்தால், இறந்த செல்கள் அகலும். கால்களைத் துடைத்துவிட்டு, மாயிச்சரைசர் தடவலாம். கைகளுக்கும் இதே முறையில் செய்து, கடைசியாக பாடி லோஷன் தடவலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கற்றாழையின் சரும பராமரிப்பு
» கோடைக் கால சரும பராமரிப்பு
» வெயில் கால சரும பராமரிப்பு
» சரும பராமரிப்பு குறிப்புகள்
» கோடை கால கூந்தல் பராமரிப்பு முறை
» கோடைக் கால சரும பராமரிப்பு
» வெயில் கால சரும பராமரிப்பு
» சரும பராமரிப்பு குறிப்புகள்
» கோடை கால கூந்தல் பராமரிப்பு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum