தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறை ஆசனம்

Go down

 பிறை ஆசனம்  Empty பிறை ஆசனம்

Post  meenu Sun Jan 27, 2013 6:11 pm

பிறை என்றால் பாதி நிலாவைக் குறிக்கிறது. உடம்பானது நிலவின் அரை வட்ட வடிவில் வருமாறு செய்யப்படும் ஆசனம் தான். பிறை ஆசனம் ஆகும். முதுகுப் பகுதிக்கு மிகுந்த பலனை தரக்கூடிய ஆசனம் இது. நாள்தோறும் இந்த ஆசனத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். முதலில் நேராக நிமிர்ந்து நின்று கொள்ள வேண்டும்.

பின்னர் 2 பாதங்களுக்கும் இடையே 2 அடி இடைவெளி இருக்குமாறு கால்களை விரித்து நிற்க வேண்டும். 2 உள்ளங்கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு இடுப்பை சற்று முன்புறமாக தள்ளிக் கொண்டு மெதுவாக முதுகை பின்புறமாக வளைக்க வேண்டும். அப்போது கைகளை மெதுவாக கீழே இறங்கி கணுக்கால்களை பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

முடிந்த அளவு பின்னால் வளைத்து இந்த ஆசனத்தை செய்தால் போதுமானது. நன்றாக பயிற்சி செய்த பின்னர் கணுக்காலை பிடித்து பிறை ஆசனத்தை செய்ய வேண்டும். முதுகு பகுதியை வலுவாக்கவும், முதுகு எலும்பை உறுதியாக்கவும், இந்த ஆசனப் பயிற்சி உதவுகிறது. கீழ் முதுகுப் பகுதியில் ஏற்படும் வலியை குறைக்கவும் பயன்படுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum