பாத பத்மாசனம்
Page 1 of 1
பாத பத்மாசனம்
முதலில் 2 கைகளையும் நீட்டி நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். பின்னர் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்க வேண்டும். இதே போன்று இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்துப் கொண்டு குதிக்கால்கள் இருபுறமும் அடி வயிற்றை தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வலது கையை முதுகுப் புறமாக கொண்டு வந்து வளைந்து இடது காலை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். இடது கையையும் முதுகுப்புறமாக கொண்டு வந்து வலது காலை படத்தில் உள்ளவாறு பிடிக்க வேண்டும். இப்போது நன்றாக நிமிர்ந்து இருக்க முயற்சிப்பது முக்கியம்.
முதுகு எலும்பு நேராக இருக்குமாறு மார்பை முடிந்தவரை விரிந்து, கால்ளை அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும். இது தான் பாத பத்மாசனத்தின் நிலை ஆகும். தொடை தசையை குறைக்க இந்த ஆசனப்பயிற்சி உதவுகிறது.
தொடர்ந்து இந்த ஆசனப் பயிற்சி செய்து வந்தால் மார்பு நன்றாக விரிவடைகிறது. சுவாசம் சீராகிறது. கால் முட்டுகளுக்கு வலிமையை தருகிறது. ஆஸ்துமா போன்ற நோயை குணமாக்க பாத பத்மாசன பயிற்சி உதவுகிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பத்மாசனம்
» பத்மாசனம் பத்மாசனம்
» சர்வாங்க பத்மாசனம்
» பத்த பத்மாசனம் பத்த பத்மாசனம்
» சித்த பத்மாசனம் சித்த பத்மாசனம்
» பத்மாசனம் பத்மாசனம்
» சர்வாங்க பத்மாசனம்
» பத்த பத்மாசனம் பத்த பத்மாசனம்
» சித்த பத்மாசனம் சித்த பத்மாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum