உபவிஷ்ட கோண ஆசனம்
Page 1 of 1
உபவிஷ்ட கோண ஆசனம்
கால்களை நீட்டி முதலில் உட்கார வேண்டும். பின்பு வலது காலை வலது பக்கமாகவும், இடது காலை இடது பக்கமாகவும் நீட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் படத்தில் உள்ளது போன்று 2 கைகளையும் இரு புறமும் நேராக நீட்டிக் கொண்டு மெதுவாக குனிய வேண்டும். கால் முட்டிகளோ, கை முட்டிகளோ மடங்கி விடக் கூடாது.
இடது கையைக் கொண்டு இடது கால் முட்டியையும், வலது கையைக் கொண்டு வலது கால் முட்டியையும் முதலில் தொட லாம். பின்னர் மெதுவாக கையை தள்ளி தள்ளிக் கொண்டு சென்று கை மடங்காமல், எந்த இடத்தில் கையின் பெருவிரல் காலை தொடுகிறதோ, அந்த இடத்தில் காலை பிடித்துக் கொள்ள வேண்டும்.
வயிறு, மார்பு பகுதி தரையை தொட்டுக் கொண்டு இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். தலையை தூக்கி நாடிப்பகுதியை தரையில் ஊன்றி மேல் நோக்கி பார்க்க வேண்டும். சாதாரண மூச்சு நிலையில் இந்த ஆசனத்தை செய்வது முக்கியம்.
10 முதல் 20 வினாடிகள் வரை செய்யலாம். வயிற்றில் தேவையற்ற சதையை குறைக்க உபவிஷ்ட கோணாசனம் பயன் தருகிறது. கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்களை சீராக இயங்க வைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum