தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நொறுக்குத்தீனியால் உருவாகும் கல்லீரல் நோய்களை தடுக்க வழிகள்

Go down

நொறுக்குத்தீனியால் உருவாகும் கல்லீரல் நோய்களை தடுக்க வழிகள் Empty நொறுக்குத்தீனியால் உருவாகும் கல்லீரல் நோய்களை தடுக்க வழிகள்

Post  meenu Sun Jan 27, 2013 4:03 pm


கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உயிரை பாதுகாக்கும் முக்கிய உறுப்பான கல்லீரலை கடுமையாக பதம் பார்ப்பது நொறுக்குத் தீனிகள்தான் என்கிறார் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன். அவர் கூறியதாவது:-

அதிலும் குறிப்பாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப் பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத்தீனிகளை அதிகம் விரும்பி சாப் பிடுவது குழந்தைகள்தான். இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள்.

நொறுக்குத் தீனிகளால் குழந்தைகளுக்கு 10 வகையான கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன. 1. ஹெப்பாடிட்டீஸ் ஏ 2. ஹெப்பாடிட்டீஸ் பி 3. ஹெப்பாடிட்டீஸ் சி 4. ஹெப்பாடிட்டீஸ் டி 5. ஹெப்பாடிட்டீஸ் இ 6. சைரோசிஸ் 7. கலோலிதிசிஸ் 8. கலேசிஸ்டிடிஸ் 9. கார்சினோமோ 10. ஹெபடோமெகலி. நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது.

எஞ்சியவற்றை சிறு நீரகம் சுத்திகரிக்கிறது. நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும். நொறுக்குத்தீனியை குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அவை உடனுக்குடன் ஜீரனமாகாமல் குடலில் தேங்குகிறது. இவை தான் விஷமாக மாறுகிறது. இதைத்தான் உணவு விஷம் (புட் பாய்சன்) என்கிறோம். சில நூடுல்ஸ் நிறுவனங்கள், அவை நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்காக கூடுதல் ரசாயனங்களை சேர்க்கின்றன.

இதுவும் புட் பாய்சனாவதற்கு முக்கிய காரணம். தற்போது மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, புரோட்டா போன்றவை விற்கப்படுகின்றன. இதில் சப்பாத்தி கெடாமல் இருக்க ஒருவகை ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற அரை வேக்காட்டு ரெடிமேடு சப்பாத்திகளை வாங்கிநாம் சாப்பிட்டால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும். அஜ்ரணக் கோளாறு, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

ஈரலை சிதைக்கும் கொழுப்பு........

சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகின்றன. நொறுக்கு தீனிகளில் உள்ள கொழுப்பு குழந்தைகளின் கல்லீரலின் மேல் பகுதியில் படிந்து பருமனாக மாறி விடுகிறது. தற்போது நம் நாட்டில் உள்ள 80 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற கொழுப்பு மிகுந்த ஈரலை உடையவர்களாக உள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளிடம் இது போன்ற கோளாறுகள் வெறும் 20 சதவீதம் மட்டும்தான் இருந்தது. இதற்கு காரணம் ரசாயணம் கலக்காத உணவுகள்தான். ஆனால் தற்போது ரசாயணம் கலக்காத உணவைப்பார்ப்பதே அரிதாக உள்ளது. சில உணவுகளில் ருசிக்காக சில ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை நம்மூர் கடைகளில் சாஷே பாக்கெட்டுகளில் வைத்து விற்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகம் பாதிக்கும்..............

நொறுக்குத்தீனிகளில் உணவு கெடாமல் இருக்கவும்,ருசியாக இருக்கவும் ரசாயணங்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதனால்தான், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகள் பலருக்கு கல்லீரல், சிறுநீரக கல் கோளாறுகள் அதிகம் காணப்படுகிறது. சிறுநீரகக் கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப் பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறு நீரகக் குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும் .

சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும் போது வலியினை ஏற்படுத்தும்.

இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் 2 பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும். கால்சியம் கற்கள் அதிகமாக ஏற்படக் கூடியவை. அவை 2 அல்லது 3 மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸ்லேட் (மிக அதிகளவிலான பொருள்), பாஸ்பேட் அல்லது கார் போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.

சிறுநீரகக் கற்களுக்கான அறிகுறிகள்.............

பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி. குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், அடிவயிற்றில் வலி.வலியோடு சிறுநீர் கழித்தல், இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல், ஆணின் முதன்மை இனப் பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி, சிறுநீரின் நிறம் இயற்கைக்கு மாறாக காணப்படுதல்.

சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீரகக் கற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்படுவதை தடுக்கலாம்.

தடுக்க வழிகள்:.............

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது.

ரசாயண குளிர்பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம் என்கிறார் சென்னை பெரம்பூர் சென் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேசன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum