புகையால் புதைந்து போகும் வாழ்க்கை: நாளை புகையிலை எதிர்ப்பு தினம்
Page 1 of 1
புகையால் புதைந்து போகும் வாழ்க்கை: நாளை புகையிலை எதிர்ப்பு தினம்
நாளை (மே-31) உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையை பயன்படுத்துவது நாகரீகத்தின் அடையாளமாக கருதும் அளவுக்கு பெரும்பாலானோரை அது ஆட்கொண்டுள்ளது. நவ நாகரீக பெண்களையும் இப்பழக்கம் சுற்றி வளைத்துள்ளது. இந்த புகையிலை நாகரீக வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பரிமாணங்களில் தனது உயிர் கொல்லி வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறது.
ஒரு காலத்தில் புகையிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்து, பின்பு சுருட்டாக, பின்பு பீடியாக சிகரெட்டாக, பான்பராக்காக, குட்காவாக, போதை தரும் பீடாக்களாக இவ்வாறான பல்வேறு முகங்கள் இந்த புகையிலைக்கு உண்டு. இதில் புகையிலையை, புகையிலையாக பீடாக்களாக பான்பராக்குகளாக பயன்படுத்துவதை பொருத்தமட்டில், யார் அதை உட்கொள்கிறாரோ அவரை மட்டுமே பாதிக்கும்.
ஆனால் புகைப்பதை பொருத்தமட்டில், புகைப்பவர் மட்டுமல்லாது அவருக்கு அருகாமையில் உள்ளவரையும் சேர்த்தே பாதிக்கும். புகை பிடிப்பவர் அருகே புகை பிடிக்காதவர் ஒருவர் இருந்தால், புகைப்பவர் விடும் புகையை இவர் சுவாசித்து, புகைக்காத மனிதருக்கும் நோய் வரும் நிலை. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டு தோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது.
அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர். மேலும் இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்று நோயினாலும் ஆண்டு தோறும் மடிகின்றனர். புகையிலை பொருட்களில் சிகரெட் முதலிடத்தை வகிக்கிறது.
* சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 வேதிப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
* உலக அளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகைப்பிடிப்பதால் மரணத்தை தழுவுகிறார்.
* ஆண்டிற்கு 60 லட்சம் பேர் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளால் உயிரை துறக்கின்றனர்.
* 2030-ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
* வளரும் நாடுகளை சார்ந்தோர் 70 சதவீதம் பேர் இதில் அடங்குவர்.
* 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சு பொருளை உட் கொண்டு வெளியிடுகிறார். இவரால் மனைவி, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
* பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உள்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுபவை.
* புகை பழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகை பிடிப் போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம்.
* இது இருதய துடிப்பை யும், ரத்த கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும், சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக் குறையும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
* சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரக பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்று நோயை ஏற்படுத்தும்.
* நுரையீரல் நோய், புற்று நோய் ஏற்பட காரணம் புகை பிடிப்பதே.
* உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி. என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
* சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
* புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்ற வற்றை வாங்க தினமும் குறைந்தது 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது.
நிறுத்தினால் என்ன நன்மை?
* 20 நிமிடங்களில் ரத்த அழுத்தம் குறைகிறது.
• எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக் சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்த மாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்சனை குறைகிறது. ஒரு ஆண்டுக் குப்பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப்பின் நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.
புகைப்பதை நிறுத்தவது எப்படி?
சிலர் படிப்படியாக நிறுத்துவோம் என கூறுவது உண்டு. ஒரேடியாக நிறுத்தினால் ஏதாவது எதிர்விளைவுகள் ஏற்படும் என அஞ்சுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல ஒரேயடியாக நிறுத்தினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கடைபிடிக்க வேண்டியவை...
* புகைப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவை எடுக்கவும்.
* எடுத்த முடிவில் உறுதியாக இருக்கவும். முதல் ஒரு வாரம் சற்று கடினமாக தோன்றலாம். பின்னர் சரியாகிவிடும், புகைப்பதற்கான என்னம் உருவானால் வேறு ஏதேனும் சாப்பிடலாம். உதாரணம் சூயிங்கம், ஸ்வீட்,
* புகைப்பழக்கம் கைவிட்டபின் அதைப்பற்றிய எண்ணங்களை மாற்ற இறைவனை தியானிக்கவும். பிராத்தனை புரியவும்.
* வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணருங்கள். அற்பமான சந்தோஷத்திற்கு நீண்டகால பயனை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவும்.
* புகைப்பதின் ஆபத்தை தெரிந்தே நாம் அதனை பயன்படுத்தினால் அது தற் கொலைக்கு சமமானது என்பதை உணரவும்.
* புகையிலை பழக்கமில்லாதவர்கள் அதனை பயன்படுத்த துவங்காதீர்கள்.
* பெற்றோர்களும், ஆசிரியர்களும் முன்மாதிரியாக திகழ வேண்டும். பெற்றோர். ஆசிரியர் ஆகியோரின் பழக்கம் குழந்தைகள், மாணவர்களின் முன்மாதிரியாக மாறி விடும்.
* கல்வி நிலையங்களை மையமாக கொண்டு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தீரவிப்படுத்தப்பட வேண்டும்.
* உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புகையிலை, பான்மசாலா உபயோக விற்பனை தடையை ஏற்படுத்தலாம். உதாரணம் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை ஏற்படுத்தியதுபோல்.
* புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும்.
எப்போது ஏன் யாருடன் எந்த குழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப் பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட் காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விடவேண்டும். நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் பின் சொன்னதை செய்ய வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இன்று போதைப் பொருள் எதிர்ப்பு தினம்
» இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்
» இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்
» தினம் தினம் திருநாளே பாகம்-2
» புகையால் பிறக்கும் முரட்டுக் குழந்தை
» இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்
» இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்
» தினம் தினம் திருநாளே பாகம்-2
» புகையால் பிறக்கும் முரட்டுக் குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum