இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்
Page 1 of 1

புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுக்கு 5 கோடியே 40 லட்சம் பேர் உயிரிழப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதேநிலை நீடித்தால் வரும் 2030-ஆம் ஆண்டில் உயிரிழப்பு 10 கோடியை எட்டும் என்றும், இந்த உயிரிழப்புகளை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் உயிரிழக்கிறார்கள். உலகிலேயே இந்தியாவில்தான் வாய் புற்றுநோயாளிகள் அதிகம். 90 விழுக்காடு வாய்ப்புற்று நோய் புகையிலையால் வருகிறது. இந்தியாவில் ஏற்படும் அனைத்து விதமான புற்றுநோய்களில் 40 விழுக்காடுபுகையிலையால் உண்டாகிறது.
புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களையும், உயிரிழப்புகளையும் உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கடந்த 2003ஆம் ஆண்டு மே 21ஆம் தேதியன்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு பிரகடனம் ஒன்றை கொண்டு வந்தது.
உலகிலேயே இதுதான் உடல் நலம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட முதல் பிரகடனம் ஆகும். இந்தியா இதன் கூறுகளை இறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. மேலும் இதற்கான தெற்காசிய நாடுகளின் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும் இந்தியா பொறுப்பேற்றது.
இந்தப் பிரகடனத்திற்கு முன்பே புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை 2003, மே 18ஆம் தேதி இந்தியா இயற்றியது. பிரகடனத்தில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்தியா 2004 பிப்ரவரி 5-ம் தேதியன்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான கட்டமைப்பு பிரகடனத்தில் கையெழுத்திட்டது. இதில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களையும் செயல்படுத்த முடிவெடுத்தது.
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டம் 2003 :
சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் (விளம்பரத்தை தடை செய்வது மற்றும் விற்பனை, வர்த்தகம், உற்பத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது) சட்டம் 2003 புகையிலையின் அனைத்து வடிவங்களுக்கும் - சிகரெட், சிகார், சீரூட்ஸ், பீடி, குட்கா, பான்மசாலா, கைனி, மாவா, மிஷ்ரி, ஸ்னப் - பொருந்தும். இச்சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இந்தியாவில் புகையிலை தடுப்பும், யதார்த்தமும்
» புகையால் புதைந்து போகும் வாழ்க்கை: நாளை புகையிலை எதிர்ப்பு தினம்
» செல்போன்- கிரடிட் கார்டு- இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும்-தடுப்பும்
» புகையிலை பழக்கத்தால் புற்றுநோயால் பரிதவிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்!
» பாலியல் குற்றங்களை தூண்டும் மது,கஞ்சா,பான்பராக், புகையிலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum