தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமகமக்கிறது தேநீர்: ஒயினை ஓரங்கட்டும் டீ பார்ட்டிகள்

Go down

 கமகமக்கிறது தேநீர்: ஒயினை ஓரங்கட்டும் டீ பார்ட்டிகள்  Empty கமகமக்கிறது தேநீர்: ஒயினை ஓரங்கட்டும் டீ பார்ட்டிகள்

Post  meenu Sun Jan 27, 2013 1:43 pm



தேநீர் (டீ) நம் நாட்டின் தேசிய பானமாகிவிட்டது. அதனால் அதை சுவைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பால் கலந்த டீ, பால் கலக்காத லெமன் டீ, `கிரீன் டீ' போன்ற எல்லாவற்றுக்கும் மவுசு அதிகரித்துவிட்டது. பூக்கள், பழங்கள், மூலிகைகள், வாசனைப் பொருட்களுடன் சேர்ந்து புது அவதாரங்கள் எடுத்திருக்கும் டீ, எண்ணற்றோரைத் தனக்கு அடிமையாக்கத் தொடங்கியிருக்கிறது.

டீ மீதான இந்தப் புதுமோகம் காரணமாக பலர் ஒயின் மீதான காதலைத் துறந்துவிட்டார்கள். ``ஒயின் என்பது கடந்த கால விஷயமாகிவிட்டது. ஒரு குறிப்பிட்ட குழு கூடிக் கலந்துறவாடுவதற்கு தேநீர் ருசிக்கும் நிகழ்வு நல்ல வழியாகியிருக்கிறது. இதன் மூலம் மற்றவர்களுடன் பிணைப்பையும் ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது''.

லா வீ என் ரோஸ், ஸ்பைஸ் ரூட், மிங் டைனடிஸ்டி, காசபிளங்கா நைட்ஸ், ஆப்பிரிக்கன் பீட்ஸ்... இவையெல்லாம் புது வகை கலப்பு டீக்களின் பெயர்கள். ``ஒயினை ருசிக்கும் நிகழ்வு என்பது பொதுவாக மாலை வேளைகளில்தான் நடைபெறும். ஆனால் எல்லா நேரத்துக்கும் பொருத்தமானது டீ. தவிர, குறிப்பிட்ட சிலர்தான் ஒயின் பருகுகிறார்கள். டீ அப்படியல்ல, எண்ணற்றோர் பருகுவது, நம்முடைய கலாசாரத்துடன் கலந்தது''

ஒயின் டேஸ்டிங்குடன் ஒப்பிடும்போது டீ டேஸ்ட்டிங் மீட்டிங்குகளுக்கு செலவு குறைவு என்பதும் பலரையும் இதில் ஆர்வம்கொள்ள வைத்திருக்கிறது. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தேநீர் சுவைக்கும் நிகழ்வை நடத்திவிடலாம் என்கிறார்கள். இந்த நிகழ்வுகளில் பலவிதமான டீயை தயாரித்து வைக்கிறார்கள்.

அதன் சுவையறிந்து, பிடித்ததை ருசிக்கலாம். பலவற்றையும் ருசி பார்க்கலாம். `டீ டேஸ்ட்டிங்' பிரபலங்கள், அங்கு வைக்கப்பட்டிருக்கும் டீயில் எது எதில் என்னென்ன சுவை, அதன் தரம் போன்றவற்றை எல்லாம் விளக்குகிறார்கள்.

மது விருந்துகளில் பலவிதமான மது வகைகளை அடுக்கி வைத்து, விரும்பியவர்களுக்கு விரும்பியதை வழங்குவதை போல் இந்த டீ டேஸ்டிங் நிகழ்ச்சியில் பலவகையான டீக்களை தயாரித்து வைத்து, விரும்பியதை வழங்குகிறார்கள். டீக்கு கிடைத்திருக்கும் இந்த புதிய மகத்துவம் குறித்து டீ பிரியர்கள் ரொம்பவே பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!

ரசித்து..ருசிக்க........

* டீயை துளித்துளியாய் ருசிக்க வேண்டும். குடிக்கக் கூடாது.

* லைட் டீயில் ஆரம்பித்து, பலதும் கலந்த ஸ்ட்ராங் டீக்கு போக வேண்டும்.

* டீ தயாரிப்பதற்கு பில்டர் வாட்டரையே பயன்படுத்த வேண்டும்.

* டீ சுவைக்கும் அனுபவத்தைச் சிறப்பாக்குவதற்கு அதற்குரிய சரியான பாத்திரங்கள், கப்களையே பயன்படுத்த வேண்டும்.

* உணவு வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால், டீயின் முழு சுவை தெரியாது. ஏன் என்றால் அப்போது நாவின் சுவை மொட்டுகள் டீயின் சுவையை முழுமையாக உணராது.

* கவனம் முழுவதும் டீயில் இருக்க வேண்டும் என்பதால் அதிக ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட்டுவிடக்கூடாது.

* `டீ பாட்களை' கழுவ டிடர்ஜென்டுக்கு பதில் பேக்கிங் சோடாவை பயன்படுத்த வேண்டும்.

டீ வகைகள்:

லா வீ என் ரோஸ்: ரோஜா இதழ் நறுமணம் கொண்ட கிரீன் டீ. கோடை காலத்துக்கு ஏற்றது.

ஸ்பைஸ் ரூட்: லவங்கம் மற்றும் துளசி மணம் கொண்டது. குளிர்காலத்துக்கானது.

பாடி அண்ட் சோல்: எலுமிச்சை மற்றும் இஞ்சியின் கலவை. காலை வேளையில் பரிமாறலாம்.

காசபிளங்கா நைட்ஸ்: மொராக்கோ மின்ட் மற்றும் ஆரஞ்சு கலந்த கறுப்பு டீ.

ஆப்பிரிக்கன் பீட்ஸ்: யூகலிப்டஸ், மண்டாரின் மூலிகையுடன் லேசான மிளகாய் காரம் சேர்ந்த டீ.

மிங் டைனஸ்டி: மல்லிகை வாசம் நிறைந்தது. டின்னருக்கு முன் சுவைக்கலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum