தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்திகாவை ஓரங்கட்டும் கோடம்பாக்கம்!

Go down

கார்த்திகாவை ஓரங்கட்டும் கோடம்பாக்கம்! Empty கார்த்திகாவை ஓரங்கட்டும் கோடம்பாக்கம்!

Post  ishwarya Sat Mar 30, 2013 4:12 pm

கோ பட நாயகியான கார்த்திகா, அதன்பிறகு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் மலையாளம், தெலுங்கு என்று நடித்து வந்தவருக்கு, எதிர்பாராதவிதமாக பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மூன்று விதமான பருவ நிலைகளை சொல்லும் மாறுபட்ட வேடம் என்பதால், சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போனார் கார்த்திகா. அதனால் அப்படத்துக்காக தன்னை முழுசாக மாற்றி வந்தார்.

இந்த நேரத்தில்தான் சட்டம் ஒரு இருட்டறை மற்றும் விஷால் நடித்துள்ள மதகஜராஜா போன்ற படங்களில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் படத்தின் கதைகளைக்கேட்ட கார்த்திகா எனக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லையே. பாரதிராஜா படத்தில் நடிக்கும் நான், இந்த மாதிரி டம்மியான வேடங்களில் நடித்தால் எனது இமேஜ் போய்விடும் என்று எக்கச்கக்கமாக பேசி அப்படங்களில் இருந்து விலகி விட்டார். இந்த பேச்சு காரணமாக, அதன்பிறகு கார்த்திகாவை புக் பண்ண இருந்தவர்களும் பின் வாங்கிவிட்டனர்.

இந்நிலையில், இப்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடித்து முடித்து விட்ட கார்த்திகா, அடுத்தடுத்து சில முன்னணி இயக்குனர்களின் படங்களில் இடம்பிடிப்பதற்காக தீவிரம் காட்டினார். ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் இப்போது வேறு வழியில்லாமல் டீல் என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடிக்கிறார் கார்த்திகா. இதையடுத்து படங்கள் கிடைக்கவில்லை என்றால் கோலிவுட்டிலிருந்து வெளியேறி ஆந்திராவில் மையம் கொள்ளவும் யோசித்து வருகிறார் நடிகை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum