நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று உணவு வகைகள்
Page 1 of 1

ஆகாரத்தில் மாற்றங்கள் எளிதாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட சமமாக இருக்கும் மற்ற உணவு வகை கள் தான் மாற்று உணவு வகை. ஓர் உணவு வகைக்குப் பதிலாக கீழ்கண்ட 7 மாற்று உணவு வகைகளை மாற்றி மாற்றி சாப்பிடலாம்.
1. காய்கறிகள், 2. கார் போஹைட்ரேட்ஸ், 3. பழங்கள், 4. இறைச்சி, 5. பால் மற்றும் பால் தயாரிப்புகள், 6. தானியங்கள், 7. எண்ணைய் கொழுப்பும் மற்றும் கொட்டை வகைகள். உடற்பயிற்சி: நீரிழிவு நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்வதால்
1. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
2. எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. நல்ல உடல் நலத்துடன் இருக்கிறோம் என்ற உணர்வை அதிகரிக்கிறது.
4. உங்கள் உடலில் இன்சுலினுக்கு உகந்த நிலையை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சியில் கவனிக்க வேண்டியவை: உங்கள் உடலுக்கேற்ற பயிற்சியைப் பற்றி முதலில் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது, கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து தவறாமல் செய்யவும், மிதமான ஓட்டம், நீச்சல் போன்ற திடமான விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்ளவும், காலி வயிற்றுடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது,
இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட உடனேயே உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது, நீரிழிவு கட்டுக்குள் இல்லாத போதும் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
மாத்திரைகள்: சில சமயங்களில் ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதாது சர்க்கரை அளவை ரத்தத்தில் குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய உதவும். சில மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க கணையத்தை தூண்டி விடுகிறது.
மாத்திரைகள் சிறப்பாக செயல்புரிய இன்சுலின் சுரக்கும் அளவிற்கு நோயாளியின் கணையம் நல்ல முறையில் இருக்க வேண்டும். சில மாத்திரைகள், செல்லினுள் இன்சுலின் நுழைந்து செயல்புரிய உதவுகிறது. சில மாத்திரைகள் குடலிலிருந்து குளுக்கோஸ் ரத்தத்தில் கலப்பதைக் குறைக்க உதவுகிறது.
இன்சுலின் நீரிழிவு முற்றினால், பல நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்சுலின் போட்டுக் கொள்ள பரிந்துரை செய்து விட்டால் இன்சுலின் போட்டுக் கொள்ளத் தொடங்குவது நல்லது. இன்சுலின் எப்படி செயலாற்றுகிறது?
இரப்பைக்குப் பின்னால் உள்ள உறுப்பான கணையத்தில் இருந்து உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன் தான் இன்சுலின். இன்சுலின் சுரக்காமல் போனால் அல்லது குறைவாகப் போனால் அல்லது செயல்பட முடியாமல் போனால் செல்களுக்குச் சர்க்கரை (குளுக்கோஸ்) செல்ல முடியாது. ரத்தத்திலேயே அதிக அளவில் தங்கி விடும்.
எனவே நீரிழிவு முற்றினால், இன்சுலின் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இன்சுலின் ஊசி போட்டுக் கொண்ட பிறகு ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பரவுகிறது. செல்லின் மேற்பரப்பில படர்ந்து செல்லினுள் சர்க்கரை புகவழி செய்கிறது.
இன்சுலின் வகைகள்: இன்சுலின் இனம், செயல்பாடு மற்றும் அதன் சக்தியை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது. இன்சுலின் அதன் மூலத்தைக் பொறுத்து ஹிïமன், போர்சைன், போலைன், போன்றவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஹிïமன் இன்சுலின் மரபியல் மூலமாக அல்லது செமி சிந்தெடிக் முறையில் தயாரிக்கப் படுகிறது. போர்சைன், போலைன் இன்சுலின் முறையே பன்றி மற்றும் மாடுகளின் கணையங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இன்சுலின் செயல்படும் கால அளவு, அதன் செயல்படும் திறன்கைளைக் கொண்டும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று உணவு வகைகள்

» நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்

» சக்கரை நோயாளிகளுக்கு புதிய மாற்று கண்டுபிடிப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum