தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கழுத்து வலியை உண்டாக்கும் கம்ப்யூட்டர் வேலை

Go down

 கழுத்து வலியை உண்டாக்கும் கம்ப்யூட்டர் வேலை  Empty கழுத்து வலியை உண்டாக்கும் கம்ப்யூட்டர் வேலை

Post  meenu Sun Jan 27, 2013 12:54 pm



கழுத்து வலி, பெரும்பாலோருக்கு வரும். அதிலும் கம்ப்யூட்டரே கதி என்று இருக்கும் இளைய வயதினருக்கு அடிக்கடி வரும். அதற்கு ஏற்ப பழக்கத்தை மாற்றினால் கழுத்து வலி போய்விடும். ஆனால் சிலவகை கழுத்து வலிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட காரணங்களில் கழுத்துவலி வந்தால் உஷாராகி விடவேண்டும்.

அதிக காய்ச்சல், காரணமே இல்லாமல் எடை குறைவது, தலைசுற்றல்-மயக்கம், கைநடுக்கம் போன்ற நரம்புகள் கோளாறுகள், கழுத்துவலி அதிகமாக இருக்கும்போது, கழுத்து இறுக்கமாக இருக்கும்போது. இப்படிப்பட்ட காரணங்களினால் கழுத்துவலி வந்தால் தைலம் தடவிக் கொண்டிருக்கக் கூடாது.

டாக்டரிடம் போய்விட வேண்டும். அல்சீமர்ஸ் நோய்..... முதுமையில் வரும் அல்சீமர்ஸ் நோய், யாருக்கு வரும் என்று கேட்டால் அதற்கான அறிகுறியை கூட சொல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. நம் நாட்டிலும் இப்போது இந்த நோய் தலைதூக்கி வருகிறது.

முதலில் நினைவாற்றல் மங்கும், போகப்போக முடக்கி விடும். இது பரம்பரையாக நீடிக்கும் என்று சொன்னாலும் மரபணு ரீதியாக மாற்றம் செய்தால் தப்பிக்க வழியுண்டா என்று ஆராய்ச்சியாளர்களால் சரிவர சொல்ல முடியவில்லை. ஆனால் அல்சீமர்ஸ் வருவதை தவிர்க்க இரு வழிகள் உள்ளன. ஒன்று முடிந்தவரை உடற்பயிற்சி, மூளைக்கு வேலை, இரண்டாவது அதிக பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது.

தடுக்கும் முறைகள்........

கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். மனதளவில் இறுக்கமின்றி `ரிலாக்ஸாக' இருக்கவும். நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும்போது, கம்ப்யூட்டர் முன் அமரும்போது...

படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும். மேஜையில் அமர்ந்து பணி ஆற்றுமபோது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும். ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.

படுக்கும்போது கழுத்துக்கு கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும். வயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்காதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும். ஒரு குறிப்பிட்ட உயரத்தை பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள்.

அதேபோல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும். நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.

உடற்பயிற்சிகள்.......

நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடையூறு. நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ மேலும் தொந்தரவு வரும்.

கழுத்து, உடற்பயிற்சி, கழுத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும். கழுத்தை பாதுகாக்கிற தசைகளை உறுதி செய்யும். எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. டாக்டர் ஆலோசனைப்படி நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்களுக்கு வரும் கழுத்து வலியை போக்க வழிகள்
» கம்ப்யூட்டர் கால் சென்டர்கள்-விவரங்களும், வேலை வாய்ப்புகளும்
» என் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார். கஷ்டத்துடன்தான் படிக்க வைக்கிறோம். அவள் படித்து முன்னேற பரிகாரம் சொல்லுங்கள்.
» நோய்களை உண்டாக்கும் புட்டிப்பால்
» தலைவலியை உண்டாக்கும் செயல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum