உயிர் காக்கும் ரத்ததானம்
Page 1 of 1
உயிர் காக்கும் ரத்ததானம்
ரத்தம் மனிதனின் வாழ்க்கையில் மிகவும் உயரிய பரிசாகும். ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 38000க்கும் மேல் ரத்த கொடையாளிகள் தேவை. பெரும்பாலும் தேவைப்படும் ரத்த பிரிவு `ஓ' ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேல் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். ரத்தம் இவர்களிëல் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும். கார் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 யூனிட்களுக்கு மேல் ரத்தம் தேவைப்படலாம். ரத்ததானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
ரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். ரத்ததானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் ரத்ததானம் செய்ய தகுதியுடையவர்கள். ரத்தம் கொடுப்பார்கள் எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப்படுத்தி இருத்தல் கூடாது. மது அருந்தியவர்கள் ரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணி நேரம் ஆகியிருத்தல் அவசியம். ரத்ததானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.
ரத்ததானம் செய்வது இயற்கையாக புதிய ரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் ரத்ததானம் பயன்படுகிறது.
ரத்ததானம் செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. தேசிய ரத்ததான தினம் இந்தியாவில் அக்டோபர் 1-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. *
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உயிர் காக்கும் கவசம்!
» உயிர் காக்கும் இயற்கை உணவுகள்
» தினம் ஒரு உயிர்
» உயிர் அணு உற்பத்தி பாதிப்பு ஏன்?
» நெற்பயிருக்கு உயிர் உரங்கள்
» உயிர் காக்கும் இயற்கை உணவுகள்
» தினம் ஒரு உயிர்
» உயிர் அணு உற்பத்தி பாதிப்பு ஏன்?
» நெற்பயிருக்கு உயிர் உரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum