தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உயிர் அணு உற்பத்தி பாதிப்பு ஏன்?

Go down

உயிர் அணு உற்பத்தி பாதிப்பு ஏன்? Empty உயிர் அணு உற்பத்தி பாதிப்பு ஏன்?

Post  meenu Tue Feb 26, 2013 2:20 pm

குழந்தைப் பேறு
என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், ஒரு மகிழ்ச்சியான தருணம். அது ஆணாக
இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில்
குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால், நெருங்கிய உறவினர்கள் முதல்
நண்பர்கள் வரை அனைவருமே விசாரிக்கத் தொடங்கி விடுவதைக் காண்கிறோம்.


குழந்தைப்
பேறின்மைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குழந்தையின்மை சிகிச்சைக்கு
செல்பவர்களில் முதலில் கணவருக்கு பரிசோதனை செய்த பிறகே மனைவிக்கு சிகிச்சை
மேற்கொள்ளப்படுகிறது.


கணவனின் உயிர் அணு உற்பத்தி உரிய முறையில் உள்ளதா என்பதை, விந்தணு பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.

உயிர்
அணுக்கள் உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. விரைக்குள்
செல்லும் இரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்பட்டால் உயிர் அணுக்களின் உற்பத்தி
பாதிக்கப்படலாம்.


இதேபோன்று
சிறு வயதில் ஏற்படும் தீவிர அம்மை நோய்த் தொற்று, விரைகள் ஒன்றோடு ஒன்று
முறுக்கிக் கொள்ளுதல் போன்றவையும் உயிர் அணுக்கள் உற்பத்தியை
பாதிக்கக்கூடிய காரணிகளாக கருதப்படுகின்றன.


ஆரோக்கியமான
நிலையில் உள்ளவர்களுக்கு விரையிலிருந்து புறப்பட்டு விந்து நாளங்கள்
வழியாக உயிர் அணுக்கள் வெளியே வரும். இந்த நாளங்களில் அடைப்பு இருந்தால்
உயிர் அணுக்களால் வெளியேற முடியாது


சிறுநீர்த் தாரை வழியாக விந்தணுவை வெளியேற்றும் தசைகள் சரியாக செயல்படாமல் போனாலும் உயிர் அணுக்கள் வெளியேறுவதில் பிரச்னை ஏற்படலாம்.

உயிர்
அணுக்கள் உற்பத்தி பாதிப்பு என்று தெரிய வரும்பட்சத்தில், அதற்கு உரிய
சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுதல் அவசியம். குறிப்பிட்டதொரு
மருத்துவரிடம் தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum