தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுகாதாரமற்ற கழிவறைகளால் இந்தியாவில் வேகமாக பரவும் தொற்று நோய்கள்

Go down

சுகாதாரமற்ற கழிவறைகளால் இந்தியாவில் வேகமாக பரவும் தொற்று நோய்கள் Empty சுகாதாரமற்ற கழிவறைகளால் இந்தியாவில் வேகமாக பரவும் தொற்று நோய்கள்

Post  meenu Sun Jan 27, 2013 12:37 pm

மனிதன் மலம், சிறுநீர் மற்றும் கழிவுகளை அகற்றப்பயன்படும் நீர்க்குழாய் ஆகிய தொகுதி கழிவறை அல்லது கக்கூசு எனப்படும். தமிழில் கழிவறை நீர்க்குழாய் இருக்கும் அறையை குறிக்கவே பெரிதும் பயன்படுகின்றது. உடல் கழிவுகளை மலம், சிறுநீர் ஆகிய வற்றை உடலிருந்து அகற்றுவது மனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்று.

அனேக நாடுகளில் கி.பி.1800களுக்கு முன்னர் காட்டுப்புற அல்லது ஒதுக்குபுற இடங்களிலோ மனிதர் உடல் கழிவுகளை அகற்றினர். 1800 பின்னரே தற்கால முறை நடைமுறைக்கு வந்தது. கழிவுகளை அகற்ற வேண்டிய தேவை 1850 பின்னர் தெளிவாக உணரப்பட்டது. கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்தினால் அவற்றின் மூலம் நோய் கிருமிகள் பரவுவது தெரிய வந்தது.

கழிவுகளில் நோய் ஆகியவற்றின் தொடர்புகள் நிரூபிக்கப்பட்ட பின், கழிவுகளை குடிநீர் நிலைகளில் இருந்து பிரிப்பது தேவையாயிற்று. தமிழர்களின் வீடுகள் பெரும்பாலும் சூடான வெட்ட வெளி பிரதேசங்களாகவே உள்ளன. எனவே காடு கரையில் ஒதுங்குவது இயல்பாக இருந்தது.

வெப்பநிலையில் கழிவு காய்ந்து மண்ணுடன் மண்ணாக விரைவில் கலந்து விடுவதால் இது மிகப் பெரிய விசயமாக தமிழர் மண்ணில் இருந்திருக்கும் வாய்ப்புகளில்லை. தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகள் அதிக அளவில் கட்டப்பட்டன என்றார் சென்னையை சேர்ந்த `மை டாய்லட் கிளீனர்' நிறுவன நிர்வாகி ஜேசுதாஸ்.

இவர் `மை டாய்லட்டே' தினத்தையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி, மாணவ-மாணவிகள் கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பெற கட்டுரைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினார். இவர் பல்வேறு பள்ளிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு கழிவறை சுகாதாரம் பற்றி பிரசாரம் செய்து வருகிறார். ஜேசுதாஸ் கூறும் போது, `நம்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் தொற்று நோய்கள் அதிக அளவில் பரவி விஷ காய்ச்சல் ஏற்படு வதற்கு காரணமாகி விடுகிறது.

இதனால் மக்களுக்கு தேவையான இந்த அடிப்படை வசதிகள் செய்ய மத்திய-மாநில அரசுகள் உறுதி அளிக்க வேண்டும். இந்தியாவில் அடிக்கடி தொற்று நோய்கள் பரவுவதற்கு சுகாதாரமற்ற கழிவறைகள் தான் காரணம். அவற்றை சீரமைத்தாலே அரசுக்கு பல கோடி மருத்துவ செலவு மிச்சப்படும்.

நகர்ப்புறங்களில் உள்ள பொது கழிவறைகள் கிருமிகளை நோய்களை பரப்பும் இடமாக திகழ்கிறது. இதை முழுமையான சுகாதாரமான பகுதியாக மாற்ற வேண்டும். எங்கள் நிறுவனம் சார்பில் சென்னையில் உள்ள பொது கழிவறைகளை பராமரிக்க அரசிடம் அனுமதி கேட்க உள்ளோம். அனுமதி கிடைத்தால் அவற்றை நட்சத்திர ஓட்டல்களில் இருக்கும் கழிவறை போல் மாற்றுவோம்' என்றார் ஜேசுதாஸ்.

சுத்தமாக பராமரிப்பது எப்படி?

கழிவறையின் பிளஷில் பிளஷ் மேட் போட்டு வைத்தால் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். கழிவறையில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். ஓடோனில் பேக் வைக்க மறக்க வேண்டாம். டவலும், டிஸ்யூ பேப்பரும் இருக்க வேண்டும். வீட்டில் எல்லோரும் குளித்த பிறகு கழிவறையின் சல்லடையில் இருக்கும் முடிகளை அகற்றிவிட்டாலே கழிவறை சுசுத்தமாவது தவிர்க்கப்படும்.

அங்கும் ஒரு நாப்தலின் பால் போட்டு வைக்கலாம். சின்ன சின்ன பூச்சிகள் சேராமல் அடிக்கடி சுத்தம் செய்யவும் கழிவறை எப்போதும் ஈரப்பதமாக இருப்பதை தவிர்க்கவும். கழிவறையை கூட என் கழிவறை (மை டாய்லட்) என்று நினைத்து கிளீனரை பயன்படுத்தி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கழிவறைகளை 3 நாட்களுக்கு ஒரு முறையாவது நன்றாக தேய்த்து கழுவி விட வேண்டும்.

டாய்லெட் க்ளீனர் கொண்டு கழிவறையை சுத்தம் செய்யவும். கழிவறையை சுத்தம் செய்யும் பொழுது கைகளுக்கு உறை போட்டுக் கொள்ளவும். மூக்கு பகுதியை மறைக்கும் விதத்தில் முகத்தை துணி வைத்து கட்டிக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. கழி வறைகளை சுத்தம் செய்ய ஆசிட் பயன்படுத்தினால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் 100 சதவீதம் அழிந்து விடும். தொற்று நோய் பரவுவதில் இருந்து தப்பி விடலாம். கழிவறைகளை எப்போதும் ஈரப்பதமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

குழந்தைகளின் சுகாதாரம்........

குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை செயல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக் கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கும் வயது வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது. 4 மாதத்திலேயே இவ்வேலையை தொடங்கி விடும் பெற்றோர்களும் உண்டு. சிலர் எட்டு மாதத்திலும் சில பெற்றோர் ஒரு வருடம் முடிந்தவுனேயும் குழந்தைகளின் கழிவு நீக்க நடத்தையை நெறிப்படுத்தத் துவங்குகின்றனர்.

ஆனால் 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத்துவங்குவது பொருத்தமானதாகும். கழிவறை பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்ளும் பெற்றோர், பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர்.

மிதமிஞ்சிய கண்டிப்பு சிறந்த ஆளுமையை உருவாக்காது. குழந்தையின் கழிவறையை பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில் நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப் பண்பினை வளர்த்துக் கொள்ளும், பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள் வண்ணமயமான அறை.....

கறைபடிந்த கழிவறை, போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டமில்லாத சூழ்நிலை, கழிவறையை சரியாக சுத்தம் செய்யாதது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு கழிவறைக்குச் செல்வது என்றாலே பயம் தொற்றிக் கொள்கிறது. முக்கியமாக கலர்புல்லான நிறங்கள் குழந்தைகளை ரொம்பவே கவரும். எனவே உங்கள் வீட்டு டாய்லெட்டை பளிச் நிறங்களில் பெயிண்ட் செய்யுங்கள்.

சில கார்ட்டூன் கேரக்டர்களைக் கூட அங்கே ஒட்டி வைக்கலாம். இதன் காரணமாக பல சமயங்களில் குழந்தைகள் கழிவறைக்குச் செல்லாமலேயே உடைகளைக் கறையாக்கிக் கொள்கின்றன. எனவே கறைகள் இல்லாத, சுத்தமான பாத்ரூம் இருந்தால் மட்டுமே பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கழிவறையைப் பயன்படுத்தும் பயிற்சியை அளிக்க முடியும்.

இந்தியாவில் 61 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி இல்லை. தமிழகத்தை பொறுத்த வரையில் 57 சதவீதம் பேருக்கு இந்த வசதி இல்லை. `மை டாய்லட் கிளீனர்' நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும் நகர்ப்புறங்களில் 40 சதவீதம் மேற்கத்திய கழிவறைகள் பயன் படுத்தப்படுவதால் சுகாதாரம் நன்றாக காக்கப்படுகிறது.

மீதமுள்ள கழிவறைகள் டாய்லட் கிளீனர் பயன்படுத்தப்படாததால் கிருமிகள் இருக்கும் பகுதியாக உள்ளது.கிராமப்புறங்களில் 80 சதவீதம் கழிவறைகளில் கிருமிகளை அழிக்கும் கிளீனர் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு திறந்த வெளிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அடிக்கடி தொற்று நோய்களில் சிக்கி அவதிப்படுகிறார்கள் என்கிறார் ஜேசுதாஸ்.கழிவறை சுகாதாரம் பற்றி அறிய 9715777777 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum