கொழுப்பு மீது ஏன் வெறுப்பு?
Page 1 of 1
கொழுப்பு மீது ஏன் வெறுப்பு?
ஆரோக்கியத்தின் எதிரி கொழுப்பு என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கொழுப்பும் உடலுக்கு அவசியமான ஒரு சத்துப் பொருள்தான். கொழுப்பும், கொலஸ்ட்ராலும் ஒன்றல்ல. கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பின் ஒரு பகுதிதான். கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை குறிப்பிட்ட அளவில் இணைந்த சேர்மம்தான் கொழுப்பாகும்.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது உப்பு ஆகியவை உடலுக்கு சக்தி தரும் சத்துக்களாகும். இவற்றில் புரதமும், கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராமிற்கு 4 கலோரி ஆற்றலை உடலுக்கு அளிக்கும். ஆனால் ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரிகளை உடலுக்கு வழங்குகிறது. இதிலிருந்து கொழுப்பின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் என்பது மெழுகுபோன்ற ஒருவகை கொழுப்பாகும். இதய வியாதிகள் உருவாக அடிப்படை கொலஸ்ட்ரால்தான். செல்களின் அமைப்புக்கும், வளர்ச்சிக்கும் கொலஸ்ட்ரால் இன்றியமையாதது. கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உறுப்பாகும்.
உணவின் மூலமும் கொலஸ்ட்ரால் உடம்பில் சேரும். மேலும் பாலின ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், டெஸ்டிரோஜென், புரோஜெஸ்டிரான் மற்றும் பித்தநீர் உற்பத்திக்கும் கொலஸ்ட்ரால் அவசியமாகும்.
கொலஸ்ட்ரால் ஒரு கட்டத்தில் உடலுக்கு தீமை செய்யும். எப்படி தெரியுமா?
ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் லிப்போபுரோட்டின் என்ற புரதத்துடன் இணைந்து உடலெங்கும் பயணிக்கிறது. அப்போது குறைந்த அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உருவாகும். இதுதான் தீமையான கொலஸ்ட்ராலாகும். இது ரத்த நாளங்களில் படிவதால் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும்.
கொலஸ்ட்ரால் அதிக அடர்த்தி உள்ள புரதத்துடன் இணைந்து (எச்.டி.எல்.) பயணம் செய்தால் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். ஆக சதிசெய்வதும், சதியறுப்பதும் கொலஸ்ட்ரால்தான். கொழுப்பு, 3 வகைப்படும். பூரிதமான கொழுப்பு, பூரிதமாகாத கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு என அவை அழைக்கப்படுகிறது.
கொழுப்பு அமிலங்களின் தன்மைக்கேற்ப இப்படி வகைப்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்கள்தான் ஒவ்வொரு செல்லைச் சுற்றியும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இவை தகவல்களைக் கடத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பூரிதமான கொழுப்புகள் உடலுக்கு ஆபத்தானவை. வெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய், பாலாடைக் கட்டி, இறைச்சி ஆகியவற்றில் இவை உள்ளது.
உடலில் பூரிதமான கொழுப்பு 7 சதவீதத்திற்கு அதிகமானால் இதயநோய்கள் ஏற்படலாம். பூரிதமாகாத கொழுப்பும் இரு வகைப்படும். ஒற்றைப் பூரிதமாகாத கொழுப்பு மார்பகப் புற்றுநோயைத் தவிர்க்கும். ஆலிவ் எண்ணெய்யில் இது அதிகம் இருப்பதால் சேர்த்துக் கொள்ளலாம். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வேலையிலும் இது பங்கெடுக்கும்.
மற்றொரு வகையான பல பூரிதமாகாத கொழுப்பு அமிலம் இதய நோய்களை 19 சதவீதம் தடுக்கும் திறனுடையது. ஒமேகா 3 (மீன்), ஒமேகா 6 (தாவர எண்ணெய் வகைகள்) உடலுக்கு அவசியமான கொழுப்புகளாகும். ஒமேகா 3, கண், மூளை, நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவுகிறது. கொலஸ்ட்ராலின் வளர்ச்சிதை மாற்றத்தில் இந்த அமிலங்கள் துணைபுரிகின்றன என்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.
உணவில் உள்ள கொழுப்பு சிறுகுடலில் வளர்ச்சிதை மாற்றம் அடைந்து உடலில் சேர்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு சேமித்து வைத்து பயன்படுத்தப்படுகிறது. சாதாரண நேரத்தில் கணையத்தால் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன், கொழுப்பை எரித்து உடலுக்கு சக்தி வழங்கும். சாப்பிடாத நேரத்தில் இன்சுலின் சுரக்காது.
அந்த நேரத்தில்தான் உடலுக்கு கொழுப்பின் தேவை அவசியம். ஆதலால் குளுகோகான் (கணையம்), எபிநெப்ரைன் (அட்ரினல்) என்ற ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இவை சேமிக்கப்பட்ட கொழுப்பை, சிறுமூலக்கூறுகளாக உடைத்து உடலுக்கு வழங்குகிறது. உடலுக்கு 20-25 சதவீத சக்தியை கொழுப்பு வழங்குகிறது.
இதில் பூரிதமான கொழுப்பு 7 சதவீதம் பல பூரிதமாகாத கொழுப்பு 10 சதவீதம் ஒற்றை பூரிதமாகாத கொழுப்பு 13 சதவீதம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். சரியாகச் சொல்வதென்றால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு கிலோ எடைக்கு (தினமும்) 7 கிராம் அளவில் கொழுப்பு தேவை.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 20-50 கிராம், 19 வயதுக்குட்பட்ட டீன்ஏஜ் பருவத்தினருக்கு 30-70 கிராமும், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 முதல் 60 கிராம் வரையும் கொழுப்பு தேவைப்படும். டிரான்ஸ் கொழுப்பும் ஒரு வகை பூரிதமாகாத கொழுப்பு வகைதான்.
ஆனால் கூடுதலாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டிருக்கும். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இது அதிகமாக இருக்கிறது. இதன் அளவு அதிகமானால் செல் சவ்வுகளை பாதித்து தகவல் கடத்தப்படுவதை தடுக்கும். இதனால் புற்றுநோய், இதயநோய் ஏற்பட ஏதுவாகிறது. எனவே இது கொஞ்சம் மோசமான கொழுப்பு வகைதான்.
பொருட்களின் லேபிளில் `ஹைட்ரஜனேட்டட்' என்று குறிப்பிட்டிருந்தால் அது டிரான்ஸ் கொழுப்பு சேர்க்கப்பட்டதைக் குறிக்கும். எனவே அளவோடு பயன்படுத்தவும். ரத்தத்திலும் கொலஸ்ட்ரால் குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும்.
விடலைப் பருவத்தினருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 160 மில்லிகிராமும், இளம் வயதில் 200 மி.கிராம் அளவும், பெரியவர்களுக்கு 200 மி.கிராம் அளவுக்கு சற்று குறைவாகவும் இருக்க வேண்டும். உடலில் கொழுப்பு அதிகமானால் மாரடைப்பு, இதய செயலிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கொழுப்பு குறைந்தால் புற்றுநோய், வாதம் ஏற்படலாம். கொழுப்பைக் குறைத்து கார்போஹைட்ரேட் அதிகமானால் சர்க்கரை நோய் வரலாம். உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணம் உணவுப் பழக்கம்தான். உடற்பயிற்சி இல்லாமை, புகை மற்றும் மதுப்பழக்கம், பல்வேறு நோய்கள், மனஅழுத்தம், ஒரு சில மருந்துகள் போன்றவையும் கொலஸ்ட்ரால் அளவைக் கூட்டலாம்.
முதுமை, பாலினம், பரம்பரை ஆகியவையும் காரணமாக அமைகின்றன. பரம்பரை, பாலினத்தை தவிர மற்றவை உங்கள் கண்ட்ரோலில் இருப்பதால் நீங்கள் மனது வைத்தால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்திவிடலாம். பாலினத்தைப் பொறுத்தவரை பெண்களை விட ஆண்களுக்குத்தான் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமானால் அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. எனவே சோதனை செய்து கொண்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியால் இன்று பல்வேறு வகையான சோதனைகள் உள்ளன. அடிப்படையானது ரத்தப்பரிசோதனை. இது தவிர கொலஸ்ட்ரால் வகைகளை அறியும் ஏ.பி.ஓ.-பி, ஏ.பி.ஓ.-ஏ, ஏ.பி.ஓ.-ஏ:ஏ.பி.ஓ.-பி விகிதம், எல்.பி. அளவீடு போன்ற சோதனைகளும் உள்ளன.
`உணவுக் கட்டுப்பாடுடன் உடற்பயிற்சி' என்பதே கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் தாரக மந்திரம். அறிகுறிகள் தென்பட்டால் அவசியம் இதைப் பின்பற்றுங்கள். எண்ணெய் வகைகளில் கண்ணுக்கு தெரியும் வகையில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது.
எனவே தேங்காய் எண்ணெய், பாமாயில், வெண்ணெய், நெய், டால்டா ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்கவும். இவற்றில் நன்மை செய்யும் கொழுப்பு குறைவாக இருக்கிறது. ஆளி விதை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவைகளை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
ஒவ்வொருவருக்கும் தினமும் 14 மில்லி லிட்டர் எண்ணெய் போதுமானது என்பதால் எண்ணையை அளவோடு பயன்படுத்தினாலே கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து விடலாம். இறைச்சி சாப்பிடும்போது ஈரல், சிறுநீரகம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. முந்திரி, பாதாம், சோயாபீன்ஸ் அதிகம் வேண்டாம். கொழுப்பு, நீக்கப்பட்ட பால் சிறந்தது. 3 வேளையும் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். பொரித்த உணவுகளை குறைக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொழுப்பு மீது ஏன் வெறுப்பு?
» சில பெண்கள் உறவில் வெறுப்பு காட்டுவது ஏன்?
» கொழுப்பு குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum