அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்: கமலுக்கு அமீர் வேண்டுகோள்
Page 1 of 1

விஸ்வரூபத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டதையடுத்து கமல், மதசார்பற்ற மாநிலத்தையோ, நாட்டையோ தேடிச் செல்லப் போகிறேன் என்று உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனரும், நடிகருமான அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
'விஸ்வரூபம்' திரைப்படம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உயர்நீதிமன்றம் தலையிட்டு அத்திரைப்படத்தை வெளியிடலாம் என்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சில ஊர்களில் படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், கோவையில் பழைய இரும்புக்கடை ஒன்றில் பெட்ரோல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் வெளியான தகவலறிந்து அதிர்ச்சியடைகிறேன்.
இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
எனவே கண்ணியத்திற்குரிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் பொறுமை காக்க வேண்டும்.
நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்களேயானால் அது சமூக விரோதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.
தமிழகத்தில் நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏதேனும் நடந்துவிட்டால் அது காலத்தால் மறைக்க முடியாத கரும்புள்ளியாகிவிடும்.
இந்த சூழ்நிலையில் மதிப்பிற்குரிய கமலஹாசன் அவர்கள் வருத்தத்துடன் பேட்டியளித்தது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
கமல் போன்ற நிதானமான கலைஞன் தமிழகத்தை மதசார்புள்ள மாநிலமாக கருதக்கூடாது.
நான் உள்பட தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்கள் அனைவரும் தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாகவும், இந்தியாவை மதசார்பற்ற நாடாகவும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே, தாங்கள் அவசரப்பட்டு எந்தவிதமான முடிவும் எடுக்கவேண்டாம் என்றும், ஒரு படைப்பாளியாக சக மனிதனாக தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனே தலையிட்டு எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் ஏற்பட்டு விடாமல் காப்பதுடன் இந்த பிரச்சினை மேலும் உயிர் பெறாமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கமலுக்கு நடிகர் அர்ஜூன் ஆதரவு: தமிழகத்தைவிட்டு போக வேண்டாம் என வேண்டுகோள்
» பொறுமையாக இருங்கள் கமலுக்கு ரஜினி வேண்டுகோள்!
» விஸ்வரூபம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும்: இயக்குனர் அமீர் வேண்டுகோள்
» கொழும்பு செல்ல வேண்டாம் - ஹரிஹரனுக்கு மே 17 இயக்கம் வேண்டுகோள்
» விஸ்வரூபம் படத்தை தடுக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum