தமிழ்பட உலகில் ஹீரோ கடவுள் போன்றவர்; நடிகைகளுக்கு மதிப்பில்லை: காஜல் அகர்வால் தாக்கு.
Page 1 of 1

காஜல் அகர்வாலுக்கு 28 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் 26 படங்களில் நடித்து விட்டார். தமிழில் ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’, ‘நான் மகான் அல்ல’ படங்கள் அவரை பிரபலபடுத்தின. தற்போது கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு படஉலகில் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள் என்று காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழ், தெலுங்கு படஉலகில் வேறுபாடுகள் உள்ளன. தமிழைவிட தெலுங்கு பட உலகமே மேலானது. நான் தெலுங்குக்கு தான் முன்னுரிமை அளிக்கிறேன். அங்குதான் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழ் பட உலகில் நடிகைகளுக்கு மரியாதை இல்லை. தமிழில் கதாநாயகர்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். கதாநாயகனை ஹீரோவாக பார்க்கிறார்கள். என்னை பொறுத்தவரை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.
‘துப்பாக்கி’ எனக்கு ரொம்ப பிடித்த படம். விஜய்யுடன் நடித்தது இனிய அனுபவம். என்னுடன் நட்பாக இருப்பவர்களை பிடிக்கும். அதே நேரம் என்னிடத்தில் நிறைய உரிமை எடுத்துக் கொண்டு பழகுவது பிடிக்காது. என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நட்பு ரீதியிலேயே பழகுகிறேன். அவர்கள் மும்பை வந்தால் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போடுவேன்.
எக்காரணம் கொண்டும் நட்பு எல்லையை தாண்டமாட்டேன். ஆண் நண்பர்களால் எனக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதற்காக அழுது இருக்கிறேன். இரண்டு பேரிடம் தீவிரமான நெருக்கம் இருந்தது. அதில் ஒருவரிடம் நடிகையாவதற்கு முன்பு பழகினேன். இந்த தொடர்புக்காக நிறைய நேரம் ஒதுக்கவேண்டி இருந்தது. இதனால் அதை முறித்துக்கொண்டு விலகி விட்டேன். ஐஸ்வர்யாராயை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் புத்திசாலி நடிகை. இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழ்பட உலகில் ஹீரோ கடவுள் போன்றவர்; நடிகைகளுக்கு மதிப்பில்லை: காஜல் அகர்வால் தாக்கு
» திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மதிப்பில்லை: சுனைனா
» பிறந்த நாள் நடிகர் – நடிகைகளுக்கு சோனியா அகர்வால் விருந்து
» விஜயை புகழ்ந்த காஜல் அகர்வால்
» புத்தகம் எழுதப்போகிறார் காஜல் அகர்வால்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum