சீனிவாச கல்யாண உற்சவம்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
சீனிவாச கல்யாண உற்சவம்
மகாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து நவராத்திரி உத்ஸவம் ஆரம்பமாகிறது. பொம்மை கொலுவு வைத்து பூஜை செய்வார்கள். சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, வளையல், கண்மை இத்யாதிகளை கொடுப்பது என்பது பொதுவாக எல்லோரும் செய்வார்கள். நவராத்திரி உத்ஸவ காலத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கும்.
அதை அனுசரிக்கும் வகையில் சீனிவாசனுக்கு விசேஷமாக பூஜை செய்வார்கள். சீனிவாச கல்யாணம் படிப்பார்கள். சுந்தர காண்டம் போன்று பாராயணம் செய்யக்கூடிய க்ரந்தங்களை விஜய தசமி வரை பாராயணம் செய்து, விஜயதசமி அன்று மங்களம் செய்வது போன்று செய்வார்கள். விஜயதசமி அன்று மத்வாச்சாரியார் பிறந்த தினம்.
சிலர் அன்று மட்டும் மத்வ விஜயம் பாராயணம் செய்து மங்களம் செய்வார்கள். எந்த பாராயணம் செய்து மங்களம் செய்வதானாலும் விஜயதசமி அன்று காலையில் மங்களம் சந்தர்பணை முடிந்து விடும். மாலையில் கல்யாண உற்சவம் செய்யலாம். சிலர் தினமும் 2 பேருக்கு அன்னதானம் கொடுப்பார்கள்.
விஜயதசமி அன்று மாலை பத்மாவதி சமேதராக இருக்கும் சீனிவாச பெருமாள் படத்திற்கு கஜ வஸ்த்ரம், மஞ்சள், குங்குமம், புஷ்பம் இத்யாதிகளால் அலங்கரித்து பூஜை செய்ய வேண்டும். இப்படி பூஜை செய்ய புதிய ஆடைகளே போதும். ஆனால் காலையிலிருந்து கட்டிக் கொண்டிருந்த புடவை கூடாது.
சிறிய பருப்பு தேங்காய் + 5 உருண்டை மற்றும் தேங்காய் 2, ஒரு சீப்பு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, விரலி மஞ்சள், புஷ்பம் இவைகளை ஒரு தட்டில் ஜோடித்து வைக்க வேண்டும். உடன் சிறிய தாலி பொட்டு அல்லது சிறிய விரலி மஞ்சள் கிழங்கு, கருகு மணி சரத்துடன் வைக்க வேண்டும். மேற்கூறிய சாமான்களுடன் வீட்டில் புதிய வேஷ்டி, புடவை, ரவிக்கை இருந்தால் வைக்கலாம்.
முடிந்தால் ரவாகேசரி போன்று எளிதான இனிப்பு செய்து கொள்ள வேண்டும். மேற்படி சாமான்களை எல்லாம் படத்தின் முன்பு அழகாக ஜோடித்து வைத்து விட்டு பிறகு மேலே கூறிய மாதிரி மஞ்சள், குங்குமம், கஜ வஸ்தரம் இவைகளை கொண்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை சமயத்தில் சீனிவாசனைக் குறித்து தாசர்கள் பாடிய பாடல்களையும் மற்றும் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் கோவிந்த நாமாவளிகள் போன்றவற்றையும் சொல்லலாம்.
பகவானை குறித்து பாடும் பொழுது தாயாரை பற்றியும் பாட வேண்டும். லட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். கேசவ நாமம் அல்லது கோவிந்த நாமவளி சொல்லி பெருமாளுக்கு புஷ்ப அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு இனிப்பு பிரசாதத்தை நிவேத்தியம் செய்து பத்மாவதிக்கும், சீனிவாசனுக்கும் கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு சீனிவாச கல்யாணம் படிக்க வேண்டும்.
வாதிராஜ சுவாமிகளால் இயற்றப் பெற்ற சீனிவாச கல்யாணம் மிகவும் சிறியது. அதைப் படித்தாலும் போதும், பிறகு தட்டில் ஜோடித்து வைத்து இருக்கும் மங்கல பொருட்களை பகவானுக்கு முன்னால் வைத்து புஷ்பத்தை போட்டு சமர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு பத்மாவதிக்கும் சீனிவாசனுக்கும் பாலும் பழமும் படைக்க வேண்டும்.
பிறகு சீனிவாசனின் குங்குமத்தை வைத்து பிறகு அதை எடுத்து தாயாரின் நெற்றில் இட்டு மாங்கல்யத்தை எடுத்து அதையும் சீனிவாசனின் கைகளில் படவைத்து பிறகு பத்மாவதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மஞ்சள் பொடியுடன் சிறிது மைதா மாவு கலந்து நீர் விட்டு பிசைந்து பத்மாவதி கழுத்தின் இருபுறமும் சுண்டைக்காய் அளவு சிறு உருண்டைகளாக அதை வைத்து அதில் மாங்கல்யத்தின் இருபுற நூலின் நுனிகளை அழுத்தி வைத்துவிட வேண்டும்.
பிறகு தேங்காய், பழம் நிவைத்தியம் செய்து பிரார்த்தனை செய்த மங்களங்கள் பாடி கற்பூர ஆரத்தி, புஷ்ப ஆரத்தி, தட்டில் ரூபாய் நாணயங்களை வைத்து நாணய ஆரத்தி மற்றும் குங்கும ஆரத்தி முதலியவைகள் எடுக்க வேண்டும்.
குங்கும ஆரத்தி மட்டும் கண்டிப்பாக எடுக்க வேண்டும். நாணய ஆரத்தி எடுத்த நாணயங்களை பணப்பெட்டியில் போட வேண்டும். வந்திருப்பவர்களுக்கும் கொடுக்கலாம். இந்த வகையான கல்யாண உற்சவத்தை பெண்களே செய்யலாம். கல்யாணோத்ஸவம் என்பதும் ஒரு வித பூஜையாகும்.*
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சீனிவாச கல்யாண உற்சவம்
» சீனிவாச கல்யாண உற்சவம்
» கல்யாண வேலையே ஆயிரம் இருக்கு... இதுல கல்யாண மண்டபம் எதுக்குங்க..?
» வளைகாப்பு உற்சவம்
» ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில்
» சீனிவாச கல்யாண உற்சவம்
» கல்யாண வேலையே ஆயிரம் இருக்கு... இதுல கல்யாண மண்டபம் எதுக்குங்க..?
» வளைகாப்பு உற்சவம்
» ஸ்ரீவில்லிபுத்தூர் சீனிவாச பெருமாள் கோவில்
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum