தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை திரிஷா சினிமாவுக்கு முழுக்கு?

Go down

நடிகை திரிஷா சினிமாவுக்கு முழுக்கு? Empty நடிகை திரிஷா சினிமாவுக்கு முழுக்கு?

Post  ishwarya Sat May 25, 2013 1:12 pm

நடிகை திரிஷா சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2002-ல் திரிஷா சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். காட்டா மீட்டா என்ற இந்திப் படத்திலும் நடித்தார்.

சாமி, கில்லி, திருப்பாச்சி, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா என பல படங்கள் திரிஷா நடிப்பில் வந்து ஹிட்டாயின. தற்போது ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இந்த மூன்று படங்கள் தவிர வேறு புதுப்படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை. இந்த வருடத்தோடு இப்படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது.

திரிஷாவுக்கு 29 வயது ஆகிறது. எனவே விரைவில் திருமணத்தை முடிக்க அவரது தாய் உமா தீவிரமாக உள்ளார். உறவுக்கார இளைஞரை பேசி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum