தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்ச் 11-ல் திருமணம்: நடிகை ரீமாசென் சினிமாவுக்கு முழுக்கு

Go down

மார்ச் 11-ல் திருமணம்: நடிகை ரீமாசென் சினிமாவுக்கு முழுக்கு Empty மார்ச் 11-ல் திருமணம்: நடிகை ரீமாசென் சினிமாவுக்கு முழுக்கு

Post  ishwarya Mon Apr 08, 2013 2:33 pm

மின்னலே” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரீமாசென்.
செல்லமே, பகவதி, கிரி, தூள், திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன்,
ராஜபாட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்திப்
படங்களிலும் நடித்துள்ளார். ரீமாசென்னுக்கு திருமணம் முடிவாகி உள்ளது.
டெல்லியைச்சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரண் சிங்கை மணக்கிறார்.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்தனர். சமீபத்தில் திருமண
நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்தை மார்ச் 11-ந்தேதி நடத்த முடிவு
செய்துள்ளனர். டெல்லியில் திருமணம் நடக்க உள்ளது. அழைப்பிதழ்கள் தயாராகி
வருகிறது. திருமணத்துக்காக நகைகள் வாங்குவது, ஆடைகள் தேர்வு செய்தல் போன்ற
பணிகளில் ரீமாசென் ஈடுபட்டுள்ளார்.

ரீமா பெங்காளி ஆவார். ஷிவ்கரண் சிங் பஞ்சாபி. இரு மாநில கலாச்சார
முறையிலும் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு
இந்திப்பட நடிகர், நடிகைகள் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு ரீமாசென் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார்.

தற்போது “கேங்க்ஸ் ஆப் வாஸ்ஸிபுர்”, “சொசைட்டி” ஆகிய இந்திப்படங்களிலும்
பெயரிடப்படாத தமிழ்ப்படமொன்றிலும் நடிக்கிறார். திருமணத்துக்கு முன்
இப்படங்களை முடித்து கொடுத்து விட முடிவு செய்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum