தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹன்சிகா வழியில் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் காஜல்அகர்வால்!

Go down

ஹன்சிகா வழியில் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் காஜல்அகர்வால்!  Empty ஹன்சிகா வழியில் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் காஜல்அகர்வால்!

Post  ishwarya Sat May 25, 2013 11:55 am

தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போது சில ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் படிப்பு செலவுகளை ஏற்று வருகிறார் ஹன்சிகா. இதற்காக அவரது மும்பை வீட்டில் ஒரு அலுவலகமே இயங்குகிறதாம். இப்படி சின்னதாக தனது சமூகப்பணியை ஆரம்பித்திருக்கும் நடிகை, எதிர்காலத்தில் தனது மார்க்கெட் இன்னும் சூடுபிடித்தால் இதை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளாராம். ஆனால் இந்த செய்தி வெளியாகி ஹன்சிகாவின் இமேஜை உயர்த்தியிருப்பதால், மார்க்கெட்டில் இருக்கும் மேலும் சில முன்னணி நடிகைகளும் நாமும் எதையாவது செய்து நம்முடைய பெயரையும் பப்ளிசிட்டி செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களில் காஜல்அகர்வால் குறிப்பிடத்தக்கவர். தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி சினிமா வரை பரந்து விரிந்திருக்கும் இவர், இன்னும் தனது பெயரளவில் பப்ளிசிட்டி மட்டுமின்றி ஒருவித மரியாதையையும ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹன்சிகா பாணியில் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு படிப்பு உதவி செய்யத் தொடங்கியிருக்கிறார். அடுத்தடுத்து இன்னும பெரிய அளவில் செய்யப்போகிறாராம். இப்போதுதான் தனது சமூகப்பணியை தொடங்கியிருக்கிறார் காஜல், என்றபோதும், பெரிய அளவில் விளம்பரப்படுத்தும் வேலைகளிலும இறங்கி விட்டார். அவரது தற்புகழ்ச்சியைப்பார்த்த சிலர், ஒரு லட்சம் ரூபாய்க்கு உதவி செய்து விட்டு ஒரு கோடி ரூபாய்க்கு பப்ளிசிட்டி செய்து கொள்வார் போலிருக்கே என்று கிண்டலாக பேசிக்கொள்கிறார்கள்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum