தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சிகளால் அழகாய் இருக்கிறேன்: ஸ்ரேயா

Go down

உடற்பயிற்சிகளால் அழகாய் இருக்கிறேன்: ஸ்ரேயா Empty உடற்பயிற்சிகளால் அழகாய் இருக்கிறேன்: ஸ்ரேயா

Post  ishwarya Fri May 24, 2013 6:06 pm

நடிகை ஸ்ரேயா தனது அழகின் ரகசியம், சினிமா வாழ்க்கை போன்ற பல விஷயங்கள் பற்றி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் அழகா இருக்கிறேன் என்கின்றனர். உணவு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை நன்றாக சாப்பிடுகிறேன். எடை கூட வேண்டும் என்றும் விரும்புகிறேன். பின்னர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கிறேன். தினமும் சூரிய நமஸ்காரம் செய்கிறேன். நீச்சல், தியானத்திலும் ஈடுபடுகிறேன். எனது ஜீன்ஸ்களும் அழகாய் இருக்க உதவுகின்றன.

சினிமாவில் சிவாஜி படம் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் ஆகியோர் எனக்கு அப்படத்தில் வாய்ப்பு அளித்தனர். ரஜினி ஜோடியாக நடித்தது பெரிய விஷயம். அப்படம் எனக்கு பெரிய அந்தஸ்தை கொடுத்தது. படம் எப்படி இருக்கும் என்று நடிக்கும் போது எனக்கு தெரியாது. ஆனால் படம் வந்த பிறகு எல்லோருக்கும் அப்படத்தில் உள்ள என் கேரக்டரை சொல்லி அழைக்க ஆரம்பித்தனர். நண்பர்களிடம் வீடியோவில் சாட் பண்ணுவது பிடிக்கும். படங்களும் பார்ப்பேன். ஜில்லா காசியாபாத் இந்தி படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடி உள்ளேன். அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

இந்தி நடிகைளில் வித்யாபாலனை பிடிக்கும். அவர் புடவை உடுத்துவதை பலர் கேலி செய்வது உண்டு. ஆனால் புடவை தான் அவருக்கு அழகு. கரீனா கபூர், பிரியங்கா சோப்ராவும் பிடித்த நடிகைகள் இருவரும் கச்சிதமான உடல் அமைப்பில் அழகாக உள்ளனர். தெலுங்கில் பவித்ரா என்ற படத்தில் நடித்து உள்ளேன். அதில் சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக வருகிறேன். எனக்கு பிடித்த ஆண் என்னை தேடி வருவார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum