உண்மையை படமாக்கி இருக்கிறேன்
Page 1 of 1
உண்மையை படமாக்கி இருக்கிறேன்
சென்னை : மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் பாரதிராஜா தயாரித்து இயக்கும் படம், ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’. புதுமுகம் லக்ஷ்மன், கார்த்திகா, மனோஜ் கே.பாரதி, மீனாள், சுபிக்ஷா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சாலை சகாதேவன். இசை, ஜி.வி.பிரகாஷ் குமார். இப்படம் குறித்து பாரதிராஜா கூறியதாவது:
இக்கதை என் மனதில் நீண்ட நாட்கள் உறங்கிக் கிடந்தது. சிறுவயதில் என் ஊர் மக்கள் கொடிவீரனைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதை மையமாக வைத்துதான் கதை எழுதியுள்ளேன். கொடிவீரன் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்று, அவனது உறவினர்களுடன் பேசி திரைக்கதை அமைத்தேன். செருப்பு தைக்கும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன், காதலில் விழுந்ததும், பின்பு எழுந்ததும்தான் கதை.
இதில் ஜாதியைப் பற்றி பேசவில்லை. ஆனால், ஜாதி இருக்கும். ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வேதம் புதிது’ படங்கள் ஏற்படுத்திய அதிர்வுகளை விட, இப்படம் கூடுதலான அதிர்வை ஏற்படுத்தும். ஜாதி வெறி இப்போதும் இருக்கிறது. அது வேறு வடிவம் பெற்றிருக்கிறது. அதை துணிச்சலுடன் சொல்லியிருக்கிறேன். மேடையேறி சொல்ல முடியாததை, பிரசாரம் செய்ய முடியாததை என் படத்தின் மூலமாகப் பேசியிருக்கிறேன். ராதா கிளாமராகவே நடித்துவிட்டுச் சென்றார்.
இன்று அவரது மகள் கார்த்திகா, பெரிய கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வருவார். எனது மகன் மனோஜின் இன்னொரு முகத்தை இதில் பார்க்கலாம். ஒளிப்பதிவாளர் சாலை சகாதேவன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், எடிட்டர் பழனிவேல் என இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இன்னும் பழைமை மாறாமல் இருக்கும் போடிமெட்டு அருகிலுள்ள கரட்டுப்பட்டி பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். 60களில் உள்ள தமிழக கிராம வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க பதிவாக இப்படம் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உண்மையை ஆண்டவர் நம் இதயத்திலே வைத்துள்ளார்
» தமிழ் படங்கள் உண்மையை சொல்பவை – டாப்சீ
» மயக்கம் என்ன: உண்மையை ஒப்புக்கொண்ட செல்வா
» மாத்தளை மனித புதைகுழியின் உண்மையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு
» ‘எக்ஸ்க்யூஸ் மீ’ நான் டயட்டில் இருக்கிறேன்: அஞ்சலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum