மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணையும் சிம்ரன்...!
Page 1 of 1

நேருக்கு நேர், வாரணம் ஆயிரம் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகைகளில் சிம்ரன் ஒருவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என்று ரவுண்ட் கட்டி நடித்து வந்த சிம்ரனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தனது ஸ்லிம் மற்றும் கவர்ச்சியான உடம்பாலும், அசத்தலான நடனத்தாலும் ரசிகர்களை கட்டிபோட்டவர். 2003ம் ஆண்டு தீபக்கை திருமணம் செய்து கொண்டவர் அதன்பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். பின்னர் ஒருகட்டத்தில் டி.வி. சீரியல்களில் நடித்தவர், சேவல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பின் சுந்தர்.சி உடன் ஐந்தாம் படை, சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஜெயா டி.வி.யில் ஜாக்பாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் சிம்ரன் மீண்டும் சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைய உள்ளார்.
ஏற்கனவே தனது வாரணம் ஆயிரம் படத்தில் அப்பா சூர்யாவின் மனைவியாக நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு கொடுத்த டைரக்டர் கவுதம் மேனன், இப்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். இதுதொடர்பாக கவுதமை, சிம்ரன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. விரைவில் அதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சிம்ரன், சூர்யா படத்தில் ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில் அவருடன்(சூர்யா) இணையும் மூன்றாவது படம் இதுவாகும். இதற்கு முன்பு சூர்யாவுடன் நேருக்கு நேர், வாரணம் ஆயிரம் என்ற இரு படங்களில் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தனுசுடன் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிமாறன்
» நாலாவது முறையாக இணையும் சந்தானம் – ராஜேஷ்!
» அம்மாவாக நடிக்கிறார் சிம்ரன்!
» மூன்றாவது முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா
» மூன்றாவது முறையாக தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum