தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர மறுத்த நடிகைகள்: மீனாட்சி தீட்சித் நாயகி ஆனார்.

Go down

தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர மறுத்த நடிகைகள்: மீனாட்சி தீட்சித் நாயகி ஆனார். Empty தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுடன் ஜோடி சேர மறுத்த நடிகைகள்: மீனாட்சி தீட்சித் நாயகி ஆனார்.

Post  ishwarya Fri May 24, 2013 5:17 pm

காமெடி நடிகர் வடிவேலு இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிக்கும் படத்துக்கு 'ஜகஜால புஜபல தெனாலிராமன்' என்று பெயரிட்டுள்ளனர்.

கிருஷ்ண தேவராயர் அரசபையில் இருந்த தெனாலி ராமனின் சரித்திர கதையை மையமாக வைத்து நவீன காலத்தோடு இணைத்து இப்படத்தை எடுக்கின்றனர்.

இதற்காக வடபழனி ஸ்டூடியோக்களில் பல லட்சம் செலவில் மன்னர் காலத்து அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'போட்டா போட்டி' படத்தை டைரக்டு செய்தவர்.

வடிவேலு ஜோடியாக நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. பார்வதி ஓமன குட்டனிடம் பேசினார்கள். அவருக்கு ரூ.70 லட்சம் வரை சம்பளம் தர முன்வந்ததாக கூறப்பட்டது. ஆனால் வடிவேலு ஜோடியாக நடிக்க விருப்பமில்லை என்று கூறி பார்வதி ஓமனகுட்டன் மறுத்துவிட்டார்.

இவர் ஏற்கனவே அஜீத்துடன் 'பில்லா 2' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துள்ள சினேகா உல்லலை அணுகினர். அவரும் வடிவேலுவுடன் நடிக்க விரும்பவில்லை.

இறுதியாக நடிகை மீனாட்சி தீட்சித் தேர்வாகி உள்ளார். இவர் தெலுங்கு படங்களில் குத்தாட்டம் ஆடியுள்ளார். தமிழில் விஜயகாந்த் இயக்கிய விருத்தகிரி படத்திலும் நடித்துள்ளார். தெனாலிராமன் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum