சேலம்-கரூர் அகலப்பாதை : 10 நாளில் ரயில் சேவை தொடங்க திட்டம்
Page 1 of 1

சேலம்கரூர் புதிய அகல ரயில் பாதையில் இன்னும் 10 நாளில் ரயில் சேவையை துவங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.சேலம்-கரூர் புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கு கடந்த 1997-98ம் நிதியாண்டில் மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது. பின்னர் நிலம் கையகப்படுத்தும் பணி 4 ஆண்டுகள் மேற்கொள்ளப் பட்டது. அதன்பின் 85 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு, ரூ.690 கோடி செலவிட்டது.
4 மாதத்திற்கு முன்பு பணிகள் நிறைவடைந்தன. சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு தற்போது சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தது. தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.மித்தல் அதிகாரிகள் குழுவுடன் வந்து சோ தனை நடத்தினார். அவர், சேலம்-கரூர் புதிய அகல ரயில் பாதையில் 85 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகம் வரை ரயிலை இயக்க அனுமதி வழங்கினார். சேலம்கரூர் பாதையில் இன்னும் 10 நாளில் ரயில் சேவையை துவங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக புதிய ரயில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எந்தெந்த ரயில்கள்: இந்த பாதையில் சென்னை பழனி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை - மதுரை துரந்தோ ரயில், திருச்சி சேலம் பயணிகள் ரயில் (இரு சேவை), சேலம் கரூர் பயணிகள் ரயில் (இரு சேவை), திருநெல்வேலி பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை கச்சக்குடா எக்ஸ்பிரஸ் ஆகிய 8 ரயில்களை முதலில் இயக்க திட்டமிட்டுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மெட்ரோ ரயில் திட்டம்: திருவொற்றியூர் வரை நீட்டிக்கக் கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
» ரயில் சிநேகம்
» அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை
» புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
» ரயில் கழிவறையில் வாலிபருடன் கல்லூரி மாணவி உல்லாசம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum