காவிரி ஆற்று குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
Page 1 of 1
காவிரி ஆற்று குட்டையில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
திருச்சி அருகே கோயில் திருவிழாவுக்கு தீர்த்தக்குடம் எடுக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காவிரி ஆற்றின் குட்டையில் மூழ்கி பலியாகினர். திருச்சி மாவட்டம் நங்கவரம் அருகே உள்ள சவாரிப்பட்டியில் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அந்த கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து காவிரி ஆற்றில் நீராடி அங்கிருந்து தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இதற்காக நேற்று பெருகமணி காவிரி ஆற்றுக்கு பக்தர்கள் வந்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாததால், ஆங்காங்கே பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் தேங்கியுள்ள குட்டைகளில் புனித நீராடி அதிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தனர். 15 அடி ஆழமுள்ள ஒரு குட்டையில் சசிக்குமார் என்பவரின் குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் குளித்துவிட்டு அங்கிருந்து குடங்களில் தண்ணீர் எடுக்க ஆயத்தமாகினர்.
அப்போது சசிக்குமாரின் மைத்துனர் சந்துருவின் மகன் ஜீவானந்தம் (7), சசிக்குமாரின் மகள் தீபா (13) ஆகியோர் எதிர்பாராத விதமாக பக்க வாட்டு மணல் சரிந்து இரு வரும் தண்ணீரில் விழுந்த னர். இதைக் கண்டு சசிக்குமாரின் மனைவி உமாவதி (37), சித்தி மகள் பிரவீனா (22), அண்ணி சாந்தி (35) ஆகியோரும் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற முயன்று அவர்களும் மூழ்கினர்.
இதனால் சசிக்குமார், சந்துரு மற்றும் கிராமத்து இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர் குட்டையில் குதித்து மூழ்கியவர்களை மீட்டனர். உடனடியாக அருகிலிருந்த பெருகமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 5 பேரையும் தோளிலேயே சுமந்து சென்றனர். ஆனால், அங்கு மருத்துவரோ, நர்சோ இல்லை. பின்னர் அங்கிருந்து, ஒரு லோடு ஆட்டோவில் 5 பேரையும் ஏற்றிக்கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் உமாவதி, இவரது மகள் தீபா, மற்றும் ஜீவானந்தம், பிரவீனா ஆகிய 4 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சாந்தியை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி பெட்டவாய்த்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
தகவலறிந்த அமைச்சர் பூனாட்சி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். கலெக்டர் ஜெயஸ்ரீ மருத்துவமனையிலேயே இருந்து, உடல்களை சொந்த ஊர் எடுத்துச் செல்ல ஆம்புலன்சுகளும், உறவினர்கள் செல்ல 3 பஸ்களையும் ஏற்பாடு செய்தார். டாக்டர் இருந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்
இந்த சம்பவம் குறித்து சவாரிப்பட்டியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ''பெருகமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் இருந்திருந்தால் 2 பேரையாவது காப்பாற்றி இருக்கலாம். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானது. திருச்சி அரசு மருத்துவமனையில் பதற்றத்துடன் நின்ற உறவினர்களை வெளியே சென்றால்தான் சிகிச்சை அளிப்போம்'' என டாக்டர்கள் கூறியதாலும் சிறிது நேரம் சிகிச்சை தாமதமானது'' என்றனர்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
» மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 நடிகைகள் பலி
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்
» குடும்பத்தில் 3 பேர் ஒரே ராசியாக இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்?
» மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 நடிகைகள் பலி
» மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 3 பேர் பலி விழா குழுவினர் உள்பட 8 பேர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum