நன்னிலம் அருகே 2 குடிசை வீடுகளில் தீ விபத்து
Page 1 of 1

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் கிராமம் ஜென்னத் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). விவசாயி. இவருக்கு கோமதி என்கிற மனைவியும், கதிர், கவுதமன் என்கிற 2 மகன்களும் உள்ளனர். நேற்று கோமதி மற்றும் 2 மகன்கள் வேலைக்கு சென்று விட்டனர். காளியப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது காளியப்பனின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி எதிரே இருந்த அஜீஸ் என்பவரது வீட்டிலும் பிடித்தது. இதில் 2 வீடுகளும் கொழுந்து விட்டு எரிந்தன. இந்த தீ விபத்தில் காளியப்பன் உடல் கருகி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அஜீஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மனைவி வெளியில் சென்று இருந்தார். தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் நன்னிலம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்இன்ஸ்பெக்டர் மேரி ஆகியோர் விரைந்து சென்று இறந்த காளியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்தில் 2 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, டி.வி. மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், துணைத்தலைவர் ராம.குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சாதிக், ஊராட்சி மன்ற தலைவர் சேகர் ஆகியோர் பலியான காளியப்பனின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நன்னிலம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து தந்தை - மகன் பலி
» ஒட்டன்சத்திரம் அருகே விபத்து: 3 பேர் பலி

» ஸ்ரீவைகுண்டம் அருகே கார் விபத்து-மதன்பாப் காயம்!
» கள்ளிக்குடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து: மிக்சி-கிரைண்டர்கள் சேதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum