தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூடங்குளம் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 925 மெகாவாட்

Go down

கூடங்குளம் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 925 மெகாவாட்  Empty கூடங்குளம் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 925 மெகாவாட்

Post  ishwarya Fri May 24, 2013 4:38 pm

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 2000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு 925 மெகாவாட் வழங்குவதாக, அணுசக்தி துறை தெரிவித்துள்ளது. நெல்லை, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதலாவது யூனிட் அமைக்கப்பட்டு, 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி துவங்க, தயாராக உள்ளது. இரண்டாவது யூனிட்டிலும், 1000 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான, கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

"இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கே வழங்க வேண்டும்' என, தமிழக அரசு முதல் தொழில், வர்த்தக அமைப்புகள் வரை, குரல் கொடுத்து வருகின்றன. இதற்காக, மதுரை சிறுகுறுந்தொழில் அதிபர்கள் சங்கம் (மடீட்சியா) என்ற அமைப்பும், டில்லி பார்லிமென்ட் முன், போராட்டம் நடத்தியது. "தமிழக மின்தேவைக்கு, மின்பாதை அமைக்க வேண்டும். கூடங்குளம் மின்சாரத்தை, முழுமையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, அணுசக்தி துறையின் சார்பு செயலாளர் சி.டி.சாக்கோ, "மடீட்சியா' நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கூடங்குளத்தில் உற்பத்தியாகும், 2000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு 925 மெகாவாட், கர்நாடகத்திற்கு 442 மெகாவாட், கேரளத்திற்கு 266 மெகாவாட், புதுச் சேரிக்கு 67 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்படாதவை 300 மெகாவாட்' என, குறிப்பிடப்பட்டுள்ளார். அணுசக்தித் துறையின் அறிவிப்புக்கு, "மடீட்சியா' தலைவர் மணிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  அணுஉலை சோதனை ஓட்டத்துக்கு எதிர்ப்பு: கூடங்குளம் விஞ்ஞானிகள் குடியிருப்பு முற்றுகை 300 படகுகளில் சென்று கடலோர கிராம மக்கள் போராட்டம்
» எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க…தமிழகத்திற்கு வருகிறான் ‘ஆஸ்கர் நாயகன்’!
»  கூடங்குளம் அணுஉலை செயல்பட சுப்ரீம் கோர்ட் அனுமதி
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம்: விரைவில் மின் உற்பத்தி
» கூடங்குளம் அணு உலையில் முன் அறிவிப்பு இல்லாமல் சோதனை ஓட்டம் நடத்துவதா? உதயகுமார் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum