ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் மீண்டும் 60 நாட்களாக குறைப்பு : நாளை முதல் அமல்
Page 1 of 1

ரயிலில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் 60 நாட்களாக குறைக்கப்படுகிறது. ரயிலில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி, 60 நாட்கள், 90 நாட்கள் என மாறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 120 நாளாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 120 நாட்கள் முன்பே முன்பதிவு செய்யும் வசதி மீண்டும் 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
அதன்படி நாளை முன்பதிவு செய்பவர்கள் அதிகபட்சமாக ஜூன் மாதம் 30ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். அதேநேரத்தில், இன்று முன்பதிவு செய்பவர்கள் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். ஒன்றிரண்டு ரயில்களில் ஜூன் 30ம் தேதி வரை 2ம் வகுப்பு தூங்கும் வசதிக் கொண்ட இடங்கள் தீர்ந்துள்ளன. அதேநேரத்தில் பாண்டியன், நீலகிரி எக்ஸ்பிரஸ் பல ரயில்களில் ஜூன் மாதம் வரையிலும் ஆகஸ்ட் மாதம் வரையிலும் இடங்கள் தாராளமாக உள்ளன. முன்பதிவு செய்யும் காலம் 60 நாளாக குறைக்கப்பட்டாலும், முன்பதிவு டிக்கெட்களை 60 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து கொள்ளலாம். உறுதியான அல்லது காத்திருப்பு பட்டியலில் இருந்தால், பயணத்திற்கான நேரம் குறைவாக இருந்தால் அதற்குரிய கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
அதேநேரத்தில் வெளி நாட்டு பயணிகள் 360 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி மாற்றப்படவில்லை. அதேபோல் தட்கல் முன்பதிவு செய்யும் வசதி 24 மணி நேரமாக இருப்பதும் மாற்றப்படவில்லை. அதாவது ரயில் புறப்படுவதற்கு முதல் நாள் தட்கல் முன்பதிவு செய்யும் வசதி தொடருகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நாளை முதல் எந்திரன் முன்பதிவு
» விஸ்வரூபம் டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல்
» 'விஸ்வரூபம்' நாளை மறுநாள் ரிலீஸ்: தியேட்டர்களில் இன்று முன்பதிவு துவங்கியது
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum