ஜெயலலிதா மே தின வாழ்த்து
Page 1 of 1
ஜெயலலிதா மே தின வாழ்த்து
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி
இருப்பதாவது:- உழைப்பின் மேன்மையினையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும்
உலகிற்கு உணர்த்தும் வண்ணம் உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும்
அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிமைப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட ஊமைகளாய் அடங்கிக் கிடந்த
தொழிலாளர்கள், தங்களின் அடிமைத்தளைகளை உடைத்தெறிந்து, ஆர்ப்பரித்துப்
போராடி, உரிமைகளை வென்றெடுத்ததைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் உயரிய
நாளே “மே தினம்“ எனும் உழைப்பாளர் திருநாள் ஆகும்.
எம்.ஜி.ஆர். கருத்துக்கள்
வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர்
வருவார் போவார் பூமியிலே
வானத்து நிலவாய் சிலரிருப்பார்
அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி
என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மானிட சமுதாயத்தில்
உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கிய
கருத்துக்களை என்றும் உள்ளத்தில் பதிய வைத்து, உழைப்பின் மேன்மையினை இந்த
இனிய மே தினத் திருநாளில் போற்றி பெருமிதம் கொள்வோம்.
உழைப்பில் தான் உடல் வலிமை உறுதி பெறும். உழைப்பு மட்டுமே நம்மை
உயர்த்தும். உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்.
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை
தெரிவித்துக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த "மே தின"
நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 59-வது பிறந்தநாள்: நடிகர் ராதாரவிக்கு ஜெயலலிதா வாழ்த்து
» ரஜினிக்கு ஜெயலலிதா, கருணாநிதி, முக அழகிரி, முக ஸ்டாலின் வாழ்த்து!
» சௌந்தர்யா நிச்சயதார்த்தம்: முதல்வர் நேரில் வாழ்த்து, ஜெயலலிதா வரவில்லை!
» ஜெயலலிதா ஜெயலலிதா
» ரஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum