இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள்
Page 1 of 1
இஷ்டங்களை ஈடேற்றும் அஷ்ட லிங்கங்கள்
அருணாசலம் என அகத்தில் நினைத்தாலே போதும்... அகந்தையை வேரறுத்து, ஞானப் பதத்தில் சேர்க்கும் அற்புத நாமம் அது. திருவண்ணாமலை உருவில் அமர்ந்த கிருபைக் கடலே அருணாசலம். கௌதமர் போற்றிய கருணை மாமலையும் இதுவேயாகும் என்று பகவான் ரமண மகரிஷிகள் அட்சரமணமாலை நூலில் அருணாசல மலையை விதம்விதமாக நெக்குருகி பாடியிருக்கிறார். அப்பேற்பட்ட இந்த அருணாசல மலையைச் சுற்றிலும் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. நடுவே மகாலிங்கமாக அக்னி ஸ்தம்பம் எனும் நெருப்பு மலையாக அண்ணாமலையார் வீற்றிருக்கிறார். புராண காலத்தில் அக்னி மலையாகவே ஜொலித்த இந்த மலை, கலியுக பக்தர்கள் அருகே வந்து வழிபட கருணை கூர்ந்து குளிர்ந்து, எளிய மலையாக அமைந்தது.
அதைச் சுற்றிலும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள், குறிப்பாக குபேர லிங்கம் எல்லோராலும் விரும்பி வழிபடப்படுகிறது. எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன். ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையாக கிரிவலம் சென்று அவர் வழிபட்டார். அப்போது, விஷ்ணு, லட்சுமியுடன் சக்ரபாணியும் அண்ணாமலையாரை தரிசனம் செய்யும் காட்சி குபேரனுக்கு கிடைத்தது. அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். ஆண்டியையும் அரசனாக்கும் லிங்கம். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட, பலன் கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எண்ணியதை ஈடேற்றும் எண்திசை லிங்கங்கள்
» பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்
» ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்கள்
» விருப்பமெல்லாம் ஈடேற்றும் வேணுகோபால சுவாமி
» இஷ்டப்பட்டதை ஈடேற்றும் அஷ்டமி வழிபாடு
» பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்
» ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கங்கள்
» விருப்பமெல்லாம் ஈடேற்றும் வேணுகோபால சுவாமி
» இஷ்டப்பட்டதை ஈடேற்றும் அஷ்டமி வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum