தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விருப்பமெல்லாம் ஈடேற்றும் வேணுகோபால சுவாமி

Go down

விருப்பமெல்லாம் ஈடேற்றும் வேணுகோபால சுவாமி Empty விருப்பமெல்லாம் ஈடேற்றும் வேணுகோபால சுவாமி

Post  ishwarya Sat Feb 16, 2013 1:53 pm

வேங்கடாம்பேட்டை

கலியுகம் தொடங்கியதுமே வடதேசங்களில் அதர்மம் அதிகரித்தன. யுத்தங்கள் பெருகின. தேசத்தின் அமைதி குலைந்தது. சாதுக்களும் மகான்களும் வட தேசத்திலிருந்து இடம் பெயரத் தொடங்கிண்ர். அப்படித்தான் சடமர்ஷணர் என்கிற மகரிஷி தென்னாட்டை வந்தடைந்தார். தென்நாட்டில் பஞ்ச கி ருஷ்ணாரண்யம் எனப்படும் திருக்கோவிலூருக்கு அருகேயுள்ள வனாந்தரங்களில் சுற்றித் திரிந்தார். கோடை காலத்தில் நீர் வற்றிக் கிடந்த கருட நதியின் மணலில் நடந்தார். கால்கள் சூடு தாங்காது கொப்பளித்துப் போயின. ஆனால், ஆற்றின் தென்கரையோரமாக ஒற்றையடிப் பாதைபோல சட்டென்று நீரூற்று தோன்றி பாதையாக விரிந்தது.

மகரிஷி அதில் காலை நனைத்து சூட்டை தணித்துக் கொண்டார். ஆனால், ஊற்றே பாதைபோல தொடர்ந்து நீள, அதன் பாதையிலேயே நடந்தார். தில்லை வனத்தின் வடகோடியிலுள்ள தீர்த்தவனம் எனும் இடத்திற்கருகே ஊற்று நீர் மேலும் பயணிக்காமல் சுழித்து நின்றது. மகரிஷியும் இதுதான் தவமியற்ற சரியான இடம் என்பதுபோல அங்கேயே அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். பலகாலம் தவத்தில் திளைத்த மகரிஷியின் பக்தியில் மகிழ்ந்த பெருமாள் தென்றல் மற்றும் வாடை எனும் இரு காற்றுகளையே சக்கரங்களாகக் கொண்டும் நான்கு வேதங்களை குதிரைகளாகவும் பிரம்ம தேவரை சாரதியாகக் கொண்டும் பிராட்டியாரோடு மகரிஷிக்கு காட்சியளித்தார். மகரிஷியும் பேரானந்தமுற்றார்.

‘‘பகவானே, தாங்கள் எடுத்த ஒவ்வொரு அவதாரங்களையும் எனக்குக் காட்சியாக அருள வேண்டும்’’ என்று கைக்கூப்பினார். பெருமாளும் அவ்வாறே மச்சம், கூர்மம், வராகர், நரசிம்மர், வாமனர் என்று காட்சியளித்து வருகையில் ராமாவதாரம் தோன்றியதும் மகரிஷி நெகிழ்ந் தார். ‘‘‘ஐயனே! மானிடரின் பொருட்டு பூலோகத்தில் ராமனாகப் பிறந்தீர்கள். பல துன்பங்களை அனுபவித்தீர்கள்! போர்களை நடத்தி அசுரர்களை அடக்கினீர்கள். அந்த களைப்பையெல்லாம் போக்கிக் கொள்ள சற்றே இங்கு இளைப்பாறக் கூடாதா?’’ என்று உருகினார். மகரிஷியின் பக்திக்கு கட் டுப்பட்டவர்போல மகாவிஷ்ணுவாகவே அத்தலத்தில் தம்மை இருத்திக் கொண்டார், பரந்தாமன். ஆதிசேஷன் தன் உடலையே மெத்தையாக விரித்து குடைபிடிக்க, பிராட்டியார், ஸ்ரீதேவி வடிவிலேயே எம்பெருமானின் திருப்பாதத்திற்கருகே அமர்ந்தாள். பெருமாள் சயனக் கோலத்தில், ஓய்வெடுக்கும் பாங்கில் காட்சியளித்தார்.

அடுத்து எம்பெருமான், கோவர்த்தனகிரிதாரியாகத் தோன்ற, ‘‘பெருமாளே, வேய்ங்குழலோசையில் பிரபஞ்சத்தையே மயக்கினீர்கள். எனவே, ஜெகன் மோகன பாலகோபால கிருஷ்ணனாக காட்சிதர வேண்டும்’’ என வேண்டினார். எம்பெருமானும் அவ்விதமே ருக்மணி-சத்தியபாமா சமேத வேணுகோ பாலனாக காட்சி தந்தார். அந்த மகரிஷிக்கு எப்படி காட்சி அளித்தாரோ அப்படியே தான், நமக்கும் இன்று கருணையோடு காட்சியளிக்கின்றார். கிழக்கு நோக்கி வாயில் அமைந்துள்ளது. வாயிலின் முன்புறத்தே கருட மண்டபம் காணப்படுகிறது. வாயிலின் மேல் ஏழுநிலைகள் கொண்ட உயர்ந்த ராஜகோபுரம், செடி புதர்களுக்கு இடமளித்து, பக்தர்கள் தன்னைக் கவனிக்காத வருத்தத்திலும் கம்பீரமாக நிமிர்ந்திருக்கிறது. உள்ளே பலிபீடம்.

அடுத்து இரண்டு கால்களையும் மடித்து, பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரையுடன் காட்சியளிக்கிறார், கருடாழ்வார். இரு கைகள் கூப்பியபடி இ ருக்க, அவரது இடக்கையில் சுற்றி யிருக்கும் பாம்பு, அவரது தொடை மீது படம் எடுத்து நிற்கிறது. வெகு அபூர்வமான இந்த கருடாழ்வார், காதுகளில் பத்திர குண்டலங்களோடு காட்சியளிப்பதால், இச்சிலை நாயக்கர் காலத்தது என்கிறார்கள். கருவறையின் நுழைவாயிலை அடுத்த முன்மண்டபத்தில் பிரமாண்டமான துவாரபாலகர்கள். அதனை அடுத்த மண்டபத்தின் வடபுறத்து மூலையில் விஷ்ணு, மோகன நிலையில் பத்மாசனமிட்டு அமர்ந்திருக்க மேலே ஆதிசேஷன் குடை விரித்திருக்கிறது. அடுத்து அர்த்த மண்டபம். தொடர்ந்து கருவறையில் சடமர்ஷண மகரிஷி வேண்டியபடி பெருமாள் வேணுகோபாலனாக காட்சி அளிக்கிறார்.

சங்கு-சக்கரத்தை இரு கரங்களிலும் தாங்கி, மற்ற இரு கரங்களில் வேய்ங்குழல் பற்றி புல்லாங்குழல் ஊதும் பாணியில் இடக்காலை ஊன்றி, வலக்காலை சற்றே மடித்து, பெருவிரல் தரையில் பரவ எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். மூலவர் தரிசனம் முடித்து திரும்பினால் செங்கமலவல்லித் தாயார் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் பத்மாசனமிட்டு இரு கைகளில் தாமரை மலரை ஏந்தியும் மற்ற இரு கரங்களால் அபய-வரத முத்திரை காட்டியும் அருள்கிறார் தாயார். ஆலயவலம் வருகையில் வடக்கே சூடிக் கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் தனி சந்நதியில் அழகு தரிசனம் அருள்கிறாள். மகிரிஷியின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், பள்ளிகொண்ட பெருமாளாக தெற்குப் பக்கம் நோக்கியவாறு பாம்பணை மீது பள்ளி கொண்டிருக்கிறார்.

அவரது மார்பிலே திருமகள் வீற்றிருக்கிறாள். பெருமாள் திருப்பாதத்திற்கு அருகே நாச்சியாரும் வீர ஆஞ்சநேயரும். திருவடிகள் இரண்டினையும் தாமரை மலர் தாங்கியுள்ளது. தலையில் கிரீடம் இல்லை. அதனால் அழகிய சிகை அலங்காரத்தைக் காணமுடிகிறது. இறைவனுக்குப் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் ஏழு தலைகளுடன் காட்சியளிக்கிறார். கார்கோடகன், பத்மன், மகாபத்மன், சங்கபாலகன், குளிகன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய எழுவரும் ஒருவராக இணைந்து ஆதிசேஷனாக மாறியிருக்கும் விந்தை வியப்பூட்டுகிறது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில், செங்குட்டை என்னும் குளத்திலிருந்து இத்திருமேனி கிடைத்ததாகவும் பின்னர் இங்கே எழுந்தருளச் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆலயத்திற்கு கிழக்கே பன்னிரு ஆழ்வார்களின் சந்நதிகளும் பாங்குடன் அமைந்துள்ளன.

கோயிலுக்கு எதிரிலேயே ஊஞ்சல் மண்டபத்தை காணலாம். அதன் நேர்கிழக்கே அரை மைல் தொலைவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தீர்த்தக் குளம் விளங்குகிறது. இக்குளத்தின் நடுவில் ஏழு கிணறுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கிழக்கு கரையின் மேற்பகுதியில் கருடாழ்வார் சந்நதி உள்ளது. அதனை ஒட்டினாற்போன்று தென்பகுதியில் சமாதி ஒன்று காணப்படுகிறது. இது இந்த ஆலயத்தினைக் கட்டி முடித்த சிற்பியின் சமாதி என்கிறார்கள். இதுதவிர ஊஞ்சல் மண்டபத்தின் வடகிழக்கில் சக்கர கேணி ஒன்றும் காணப்படுகிறது. திருமால் சக்கரத்தை ஏவி திருமஞ்சனத்திற்கான தீர்த்தம் எடுத் துக் கொள்வதற்காக உருவாக்கிய சக்கரகேணி இது. ஆலயத்தின் உள்ளே பெரிய வில்வமரம் காணப்படுவதும் இங்கே அபூர்வமான விஷயமாக இ ருக்கிறது. சூரிய, சந்திர கிரகங்கள் மூலவரையும் தாயாரையும் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் வணங்கும்படியாக சிற்பி தனது தெய்வீக கட்டிடத் திற மையை நிரூபித்துள்ளார்.

இந்த ஆலயம் மிகவும் பழுதடைந்திருந்தது. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், தாயார் சந்நதி, ஆண்டாள் சந்நதி, பள்ளிகொண்ட பெரு மாள் சந்நதி, ஆழ்வார்கள் சந்நதி போன்றவையெல்லாம் எப்பொழுதும் விழலாம் என்கிற நிலையில் இருந்தது. ஜெர்மனியில் வாழும் பிரதிஷ்டா கலா நிதி சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கர குருக்கள் சுவாமி என்ற தமிழரின் பேருதவியோடு மிகவும் சிறப்பாக திருப்பணி செய்யப்பட்டு 2.2.2009ல் குடமுழுக்கு நடைபெற்றது. சுவாமிஜியின் அரிய தொண்டானது மக்களாலும் பக்தர்களாலும் நிர்வாகத்தினராலும் இன்றுவரை பெரிதும் போற்றப்படுகிறது. இப்போது இந்த அற்புதக் கோயிலில் ராஜகோபுரம் சீரமைக்கப்படவும் மதில் சுவர்கள் கட்டப்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஸ்கர குருக்கள் சுவாமியின் முயற்சிக்கு பல ரும் பல திக்கிலிருந்தும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். விரைவில் இத்திருப்பணிகளும் நிறைவுபெற்று ஆலயம் முழுமை பெறும் என்பது வேணுகோ பால சுவாமியின் சித்தமாக இருக்கிறது!

எந்த ஏக்கத்தையும் நியாயமான விருப்பத்தையும் தன்னை வந்து தரிசிப்போருக்கு எளிதாக நிறைவேற்றிவிடுவதும் வேணுகோபால சுவாமியின் சித்தம் தான்! கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ளது, வேங்கடாம்பேட்டை. குறிஞ்சிப்பாடி நகருக்கு வடக்கே 5 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9865325781

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum