தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாயா புருஷ தரிசனம்

Go down

சாயா புருஷ தரிசனம்  Empty சாயா புருஷ தரிசனம்

Post  gandhimathi Fri Jan 25, 2013 1:42 pm

சாயா புருஷ தரிசனம் என்பதற்கு நிழல் என்று பொருள். நம் நிழலை நாமே தரிசனம் செய்வதற்கு சாயா புருஷ தரிசனம் என்று பெயர். குண்டலினி யோகம் பயில்பவர்களுக்கு சாயா புருஷ தரிசனம் எளிதில் சித்திக்கும். ஆனால் குண்டலினி யோகம் பயில்பவர்கள் சாயா புருஷ தரிசனம் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. சாயா புருஷ தரிசனம் செய்ய நினைப்பவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாகவும், ஆண்- பெண் சேர்க்கையில் வரைமுறையுடன் வாழ்பவர்களாகவும், இதமாகப் பேசுபவர் களாகவும் இருக்க வேண்டும்.

பிராணாயாமப் பயிற்சியுடன் சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனைப் பயிற்சியும் தெளிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சூரிய கலை என்பது வலது பக்கத்தில் வரும் சுவாசத்தையும், சந்திர கலை என்பது இடது பக்கத்தில் வரும் சுவாசத்தையும் குறிக்கக்கூடியது. சுழுமுனை என்பது புருவமத்தியில் இருக்கக்கூடியது.

அக்னி வடிவமானது. இதை சரம் பார்ப்பது என்று குறிப்பிடுவார்கள். சரம்- மூச்சு எந்தப் பக்கத்தில் வருகிறதோ அந்தப் பக்கத்தைப் பூரணமாகவும், மூச்சு வராத பக்கத்தை சூன்யமாகவும் எடுத்துக் கொள்வார்கள்.

நமக்கு சரம் எந்தப் பக்கம் வரவில்லையோ அந்தப் பக்கம் எதிரிகளை நிற்க வைத்து வாதம் செய்தால் வழக்குகளில் வெற்றியடைய முடியும் என்பார்கள். மேலும் சரம் பார்க்கும் பழக்கமுடையவர்கள் சந்திர கலை நடக்கும்பொழுது உணவு உண்ணக்கூடாது. குளிர்ந்த பொருள், திரவப்பொருள் அருந்தலாம். தனக்காக எடுத்துச் சொல்ல வேண்டிய விஷயங்களை சூரிய கலை நடக்கும்பொழுது சொல்லலாம்.

குளித்து, சுத்தமான தேகத்துடன் வானத்தில் மேகம் இல்லாதபொழுது சமமான தரையில் ஒரு ஆசனத்தைப் போட்டு அதன்மேல் நின்று கொண்டு, தனது நிழல் சராசரி ஐந்தடியிலிருந்து அதற்கு அதிகபட்சமாக எவ்வளவு வருமோ அந்த அளவுக்குமேல் உள்ள பாகத்தில், "ஓம்' என்ற ப்ரணவத்தை மனதில் சொல்லி, தன் நிழலின் கழுத்தைப் பார்க்க வேண்டும்.
கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் அந்த நிழலை உற்றுப் பார்த்து விட்டு, பின் நிர்மலமான ஆகாயத்தைப் பார்க்க வேண்டும். முதலில் பயிற்சியின்போது கண்களில் லேசாக பூச்சி பறப்பது போன்றோ, ஆகாயத்தைப் பார்க்கும்பொழுது சிறுசிறு பளபளப்பான பொறிகளோ தோன்றக் கூடும்.

பின் பார்ப்பவரின் நிழல் மனித வடிவில் தோன்றும். இது முதலில் சாதாரண நிழலாகத் தோன்ற ஆரம்பித்து, பின் படிப்படியாக வண்ணங்களில் தோன்றும்.

தங்க நிறத்தில் ஒளியாகத் தோன்றினால் பெரும் செல்வம் தேடிவரும். ஆரோக்கியக் குறைவானவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்யும்பொழுது வெண்மை நிறத்தில் நிழல் தோன்றினால் ஆரோக்கியம் பெருகும்; நீண்ட ஆயுள் உண்டாகும்.

வானத்தில் தோன்றும் நிழல் செம்மை நிறமாகத் தெரிய ஆரம்பித்தால், மனதில் தேவையற்ற சலனமும் வீண் பழியும் தேடி வருவதைக் குறிக்கும். ஆரோக்கியமானவர்கள் இந்தப் பயிற்சியைப் செய்யும்பொழுது கருமையான நிறத்தில் நிழல் தென்பட்டால் அவர்களுக்கு வியாதி உண்டாகும்.

முழு உருவம் தோன்றாமல் உடலின் ஏதோ ஒரு பாகம் குறைந்து தோன்றினால், அந்தப் பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு ஆறு மாதத்தில் கண்டமோ மரணமோ ஏற்படும். இந்தப் பயிற்சி செய்பவரின் நிழல் வானத்தில் தலை மட்டும் தெரியாமல் மற்ற பாகங்கள் தெரிந்தால் இரண்டு மண்டலத்தில் மரணம் ஏற்படும்.

சாயா புருஷ தரிசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்வோருக்கு 12 வருடங்களில் எட்டு வித சித்திகளும் தேடிவரும். மேலும், அந்த நிழல் அந்த நபருடன் பேசும். முக்காலத்தையும் அவருக்கு எடுத்துரைக்கும். பூட்டப்பட்ட ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மறைந்து செல்லும் சக்தியும் உண்டாகும்.

இந்தப் பயிற்சியை மேற்கொள்பவர்கள் குளிக்காமலும் யோகாப்பியாசங்கள் செய்யாமலும் மனதைத் தன்வசப்படுத்தாமலும் செய்யக்கூடாது.

வெறும் புத்தக அறிவைக் கொண்டு, குரு முக உபதேசம் இல்லாமல் பயிற்சி எடுப் பது கத்தியில் உள்ள தேனைச் சுவைப்பது போன்றது. தலையில் அதிகமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டும், கத்திரி வெயில் காலங்களில் எந்தப் பயிற்சியும் இல்லாமல் இந்த சாயா புருஷ தரிசனத்திற்கு முயற்சிப்பதும் தேவையற்ற தொல்லைகளை உண்டு செய்யும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum