செம்மையான வாழ்வருளும் செங்கமா முனியப்பன்
Page 1 of 1

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடுக்கு அருகே, பல்லக்கா பாளையம் என்ற ஊரில் செங்கமா முனியப்பன், சுற்றியுள்ள ஊர் மக்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு திகழும் கோயிலில் கொலுவிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு புதர் மண்டியிருந்த இந்த இடத்தில் காராம்பசு ஒன்று தினமும் பாலை முனியப்பன் திருமேனியாகிய கல்லின் மீது பொழிவதைக் கண்டனர் அப்பகுதி மக்கள். அந்த இடத்தை ஆராய்ந்தபோது அங்கே மூன்று கற்களும், பருத்து கனத்த வேல் ஒன்றும் இருக்கக் கண்டனர்.
அங்கிருப்போருக்கு அருள்வாக்கு வந்து தான் முனியப்பன் என்று அடையாளம் காட்டிக் கொடுத்தது. உடனேயே முனியப்பனுக்கு அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பினார்கள். சங்கம்புதர் முனியப்பன் எனும் ஆலயம் காலப்போக்கில் மறுவி, செங்கம் முனியப்பனாகவும், செங்கமா முனியப்பனாகவும் மாறியது. முனிகளின் தோற்ற வரலாறு சிவமகாபுராணம், காஞ்சி புராணம் ஆகிய இரண்டு புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் அட்டையாலான பலவித பெரிய அளவு காலணிகளைச் செய்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
இந்த காணிக்கையெல்லாம் பரிகார அன்பளிப்புகள். தம் குறை தீர்க்கும் செங்கமா முனியப்பனுக்கு பக்தர்கள் நன்றியறிதலோடு திருப்பிச் செலுத்தும் கடன்கள். தம் பகை வெல்ல, தமக்கு இழைக்கப்படும் அநியாயங்களை வேரறுக்க இந்த முனியப்பன் பேரருள் புரிகிறார் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. தம் உள்ளத்தில் தீய குணங்கள் சேராதபடி, தம் வாழ்வை செம்மைபடுத்தும் சீர்திருத்தவாதி இந்த முனியப்பன் என்று அவர்கள் உள்ளம் சிலிர்க்கக் கூறுகிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செங்கமா முனியப்பன் கோவில்
» செங்கமா முனியப்பன் கோவில்
» மங்கள வாழ்வருளும் மகா பைரவர்
» வளமான வாழ்வருளும் அன்னபூரணி
» மங்கள வாழ்வருளும் மகா பைரவர்
» செங்கமா முனியப்பன் கோவில்
» மங்கள வாழ்வருளும் மகா பைரவர்
» வளமான வாழ்வருளும் அன்னபூரணி
» மங்கள வாழ்வருளும் மகா பைரவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum