ஈசனின் ருத்ர அவதாரம் -ஆஞ்சநேயர்
Page 1 of 1
ஈசனின் ருத்ர அவதாரம் -ஆஞ்சநேயர்
கிழக்குப் பார்த்த சந்நதியில் சதுர்புஜ ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களோடு, உலகளந்த பெருமாளை நோக்கியவாறு கும்பிடும் நிலையிலும், மற்ற இரண்டு திருக்கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் சக்கரத்தை ஏந்தியும் வேண்டுவோர்க்கு வேண்டியவாறே அருள்புரிந்து வருகிறார். இவரது இந்தக் கோலம் எங்கே காணக்கிடைக்கிறது? பெரிய காஞ்சிபுரம் உலகளந்தார் சந்நதி வீதியில் தான். தம்மை நாடி வருவோர் தன்னிடம் சமர்ப்பிக்கும் வேண்டுகோளை உடனே நிறைவேற்றித் தரும் ஈசனின் ருத்ர அவதாரமாக இந்த சதுர்புஜ ஆஞ்சநேயர் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இவர் எந்த கிரகத்திற்கும் (நவகிரகங்கள்) கட்டுப்பட்டவர் அல்ல என்பதால், கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவரை வணங்கிச் செல்கிறார்கள். இந்த சதுர்புஜ ஆஞ்சநேயரைத் தினமும் ஏராளமான பக்தர்கள் வடை மாலை மற்றும் துளசி மாலையை அணிவித்து வழிபடக் காணலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலை: உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவில் கட்டும் அர்ஜூன்!
» மகா பைரவ ருத்ர ஆலயம்
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» ஸ்ரீ ருத்ர ஏகாதஸிநி
» மகா பைரவ ருத்ர ஆலயம்
» மகா பைரவ ருத்ர ஆலயம்
» ருத்ர முத்திரை... ருத்ர முத்திரை...
» ஸ்ரீ ருத்ர ஏகாதஸிநி
» மகா பைரவ ருத்ர ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum