ஓம் நமசிவாய...
Page 1 of 1
ஓம் நமசிவாய...
ருத்ராட்சங்களை சிவனுடைய கண்கள் என்று கூறுவர். ருத்ராட்ச மரத்தை ஒரு தெய்வீக விருட்சம் என்று போற்றுவர். அம்மரத்தின் பழத்தின் உள்ளே இருக்கும் விதையே ருத்ராட்சம். ருத்ராட்சத்திற்கு 14 வித பெயர்கள் உண்டு. ‘யோக சாரா’ என்னும் நூல், ஒவ்வொரு முக ருத்ராட்சத்துக்கும் உண்டான மகிமைகளை விளக்குகிறது:
சிவன் (ஒருமுகம்):
இதை அணிந்தால் பிரம்மஹத்தி தோஷம் முதலான எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி, அதை அணிந்தவனை எவ்வித எதிர்ப்பி னாலும் ஜெயிக்க முடியாதவனாக்கி அருளும்.
ஹரகௌரி (இருமுகம்):
கோஹத்தி (பசுக் கொலை) முதலிய தோஷங்கள் நிவாரணமாகும்.
அக்னி ருத்ராட்சம் (மூன்று முகம்):
இதை அணிந்தால் பருத்திப் பொதியில் நெருப்பு பற்றினால் பொசுங்கி விடுவதுபோல் மூன்று ஜன்மங்களில் செய்த பாவங்கள் தொலையும்.
தத்தாத்ரேயர் (நான்கு முகம்):
இதை அணிந்தவர்களுக்கு, அறியாமையால் பிற மனிதரைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகும்.
காலாக்னி (ஐந்து முகம்):
இது ஜீரண சக்தியை உண்டாக்கும். குடி முதலிய கொடிய பழக்கங்களை விலக்க மன உறுதி தரும்.
ஷண்முக ருத்ராட்சம் (ஆறு முகம்):
இதை அணிந்தால் கரு கழித்தல் முதலிய பாவங்கள் நீங்கும்.
ஆனந்த ருத்ராட்சம் (ஏழுமுகம்):
தங்கம், ரத்தினம் முதலான மதிப்பு வாய்ந்த பொருட்கள் திருட்டுப் போகாமல் ஐஸ்வர்யத்தைக் காக்கும்.
விநாயகர் ருத்ராட்சம் (எட்டு முகம்):
பொய், களவு, சூது போன்ற பஞ்சமா பாதகங்களால் ஏற்பட்ட இழப்புகள், வேதனைகளை நிவர்த்தி செய்யும்.
பைரவ ருத்ராட்சம் (ஒன்பது முகம்):
இதை அணிந்தால் சிவனருள் கிட்டும்; கயிலாய பதவி கிட்டும்.
மகாவிஷ்ணு (பத்து முகம்):
இதை அணிந்தால் பூதம், பிசாசு, பைசாச தோஷங்கள் ஒழியும்.
ஏகாதச ருத்ராட்சம் (பதினொரு முகம்):
இதை அணிந்தால் பல யாகங்களைச் செய்த, பல புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கள் கிடைக்கும்.
அர்க்க ருத்ராட்சம் (பன்னிரண்டு முகம்):
இதை அணிந்தால் பல புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்; இதை அணிந்தவர் நீராடும் நீரே இதனால் புனிதமடையும்.
காம ருத்ராட்சம் (பதின்மூன்று முகம்):
இதை அணிந்தால் எல்லா ஆசைகளும் நிறைவேறும்; நினைத்ததெல்லாம் ஈடேறும்.
ஸ்ரீகண்ட ருத்ராட்சம் (பதினான்கு முகம்):
இதை அணிபவர் தான் பிறந்த குலத்துக்குப் பெருமை சேர்ப்பதோடு தன் வம்சமும் கீர்த்தி பெறும். ருத்ராட்சத்தை பஞ்சாட்சரம்-திரியம்பக மந்திரம் சொல்லி பால், தேன் முதலிய பஞ்ச திவ்ய பொருட்களாலும் புண்ணிய தீர்த்தங்களாலும் சிவலிங்க அபிஷேக தீர்த்தங்களாலும் சுத்தி செய்து அணிய வேண்டும். கழுத்து, கைகளிலும் அணியலாம். பொதுவாகவே ஐந்துமுக ருத்ராட்சம் யாவருக்கும் உத்தமம். ஒன்பது முக ருத்ராட்சத்தை வலது மணிக்கட்டில் அணிந்தால் நலம்.
இதனால் சரீரத்தில் வாயு, பித்தம், சிலேட்சுமம் எனும் திரிகுண தோஷத்தை நிவர்த்திக்கும். இதைத் தலையில் பத்து ருத்ராட்சமாகச் சேர்த்து அணிந்து கொள்ளலாம். ஐந்து கொத்துகளாகச் சேர்த்து காதில் அணியலாம். ஒன்பது முக ருத்ராட்சங்களை 25, 27, 54, 108 என்ற எண்ணிக்கைகளில் கோர்த்து மாலையாகவும் அணிந்துகொள்ளலாம். நித்ய அனுஷ்டத்தைச் செய் யாவிட்டாலும் இதை அணிந்தவர்கள் அந்த பாவத்திலிருந்து நிவர்த்தியடைகின்றனர் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum