சபரிமலையில் இன்று ஆராட்டு விழா
Page 1 of 1
சபரிமலையில் இன்று ஆராட்டு விழா
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று ஆராட்டு விழா நடைபெறுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள், நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. 9ம் நாளான நேற்றிரவு, சரங்கொத்தியில் பிரசித்தி பெற்ற பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. ஆராட்டு விழா இன்று நடக்கிறது. இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் இருந்து யானை மீது ஐயப்பன் விக்ரகம் வைக்கப்பட்டு பம்பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து பம்பை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடத்தப்படும்.சபரிமலை தந்திரி, மேல்சாந்தி மற்றும் பூசாரிகள் கலந்து கொள்வார்கள். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகம் பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 9ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று!
» குலசேகரன்பட்டணம் தசரா விழா : இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா : கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்
» பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum