நமக்கு வேண்டிய நான்கு
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
நமக்கு வேண்டிய நான்கு
எல்லா தெய்வ வழிபாடும் ஒன்று தான். அறம், பொருள், இன்பம் இம் மூன்றிலும் தெய்வஒளியைக் காண்பவன் நான்காம் நிலையாகிய வீடுபேறு(முக்தி) அடைய தகுதியுடையவன் ஆவான். சுயநலத்தை மறந்து விடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையையே எப்போதும் பேசு. நியாயத்திற்கு கட்டுப்பட்டு உன் செயல்களைச் செய். அப்படி செய்தால் எல்லா இன்பங்களையும் நீ பெற்று மகிழ்வாய். அறிவே தெய்வம். அறிவு இருக்கும் இடத்தில் ஆண்டவனின் அருளாட்சி நடக்கிறது. அந்த அறிவாகிய கடலில் நாம் ஒவ்வொருவருமே ஒரு திவலை போல இருக்கிறோம். நமக்கு இந்த உலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயின்மை, அறிவு, செல்வம். இந்நான்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையானவையாகும். இவற்றை அருளும்படி தெய்வத்திடம் மன்றாடிக் கேட்க வேண்டும்.பொய் சொல்லக்கூடாது. புறம் சொல்லித் திரியக் கூடாது. முகஸ்துதியாக புகழுரை கூடாது. தன்னைத் தானே புகழ்ந்து பேசக்கூடாது. இந்நான்கையும் தவிர்த்து உள்ளதை உள்ளவாறு மட்டுமே பேச வேண்டும்.சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்து சித்தம் சக்தி மயமானால் அதன் பின் எல்லாம் இன்பமயமாகிவிடும்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» நமக்கு நாமே நண்பன்!
» நான்கு ஜாமங்கள், நான்கு கோயில்கள்...
» வெற்றி மட்டுமே நமக்கு!
» நமக்கு தேவையான மருந்து
» தெய்வம் நமக்கு துணை
» நான்கு ஜாமங்கள், நான்கு கோயில்கள்...
» வெற்றி மட்டுமே நமக்கு!
» நமக்கு தேவையான மருந்து
» தெய்வம் நமக்கு துணை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum