தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீராமநவமி: சகல சவுபாக்கியம் தரும் ஸ்ரீராமன்

Go down

 ஸ்ரீராமநவமி: சகல சவுபாக்கியம் தரும் ஸ்ரீராமன் Empty ஸ்ரீராமநவமி: சகல சவுபாக்கியம் தரும் ஸ்ரீராமன்

Post  ishwarya Thu May 23, 2013 1:21 pm

ஸ்ரீராமநவமி: சகல சவுபாக்கியம் தரும் ஸ்ரீராமன்:

ஒவ்வொரு யுகத்திலும், பல்வேறு காலகட்டத்தில் பல காரணங்களுக்காகவும், சத்தியம், தர்மத்தை காப்பதற்காகவும் பகவான் விஷ்ணு பல்வேறு அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சிறப்பு மிக்கவை தசாவதாரங்கள். இதில் ஏழாவதாக எடுத்தது ராமவதாரம். முக்தி தரும் 7 ஸ்தலங்களில் முதன்மையாக சொல்லப்படுவது அயோத்தி.

சரயு நதிக்கரையில் அமைந்த மீன் வடிவம் உள்ள இந்த நகரில் ரகு குலத்தில் மன்னனாக அவதரித்தவர் ராமபிரான். திதி, நட்சத்திர மாற்றங்களுக்கு ஏற்ப பங்குனி அல்லது சித்திரையில் ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. இருப்பினும் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதி, புனர்பூச நட்சத்திரம் சேரும் நாளே ராம ஜென்ம தினம்.

அஷ்டமி, நவமி திதிகளின் அதிதேவதைகள் மகாவிஷ்ணுவிடம் சென்று, ‘பூலோகத்தில் எங்கள் இருவரையும் (அஷ்டமி, நவமி) எல்லா நல்ல விஷயங்களுக்கும் புறக்கணித்து தவிர்த்து விடுகிறார்கள். எங்களை யாரும் ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை. எங்களுக்கும் முக்கியத்துவம் ஏற்படுத்தி தரவேண்டும்’ என வேண்டி முறையிட்டனர்.

அவர்களது வேண்டுகோளை ஏற்று அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும், நவமி திதியில் ராமராகவும் அவதரித்தார் மகாவிஷ்ணு. அதுவே கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ணாஷ்டமி என்றும் ஸ்ரீராமநவமி என்றும் கொண்டாடப்படுகிறது. கண்ணன் சொன்னதை (கீதை) பின்பற்ற வேண்டும். ராமர் காட்டிய வழியில் நடக்க வேண்டும் என்பார்கள். ராமாயணம் என்ற காவியம் பல்வேறு ரிஷிகள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. ‘அயனம்’ என்றால் பாதை, வழி என்று பொருள்படும். அதன்படி ராமர் காட்டிய வழிதான் ‘ராம அயனம்’.

மற்ற அவதாரங்களில் இறைவனாகவே விஷ்ணு அவதாரம் எடுக்கிறார். ராமாவதாரத்தில்தான் சாதாரண மனிதனாக அவதரிக்கிறார். மற்ற அவதாரங்களில் செய்ததுபோல தனது தெய்வீக சக்தியை பயன்படுத்தாமல் சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுக துக்கங்களையும் அனுபவித்து காட்டியதுதான் ராமாவதாரத்தின் தனி சிறப்பு. அவதாரத்தின் இறுதியிலேயே தன் அவதார நோக்க மகிமையை அவர் வெளிப்படுத்தி காட்டினார்.

தசரத சக்கரவர்த்திக்கு மகனாக பிறந்த ராமன், ஜனக மன்னனின் மகள் சீதா தேவியை மணந்து ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தார். தந்தையின் சத்தியத்தையும் வாக்கையும் காப்பாற்ற 14 ஆண்டுகள் வனவாசம் செய்தார். சகோதர உறவுகளின் முக்கியத்துவத்தையும், பாசத்தையும், பந்தத்தையும் உணர்த்தினார். எல்லா ஜீவராசிகள், பட்சிகள், வானர சேனைகளை தன் உடன்பிறப்புகளாக ஏற்றார். பெற்ற தாய், தந்தையிடம் எப்படி பக்தி செலுத்த வேண்டும். அரசாட்சி செய்பவர்கள் எப்படி தர்மத்தை காக்க வேண்டும். கணவன் - மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும்.

பகைவருக்கும் எப்படி அருள வேண்டும் என எல்லா தர்ம, சத்திய, நீதி போதனைகளை நமக்கு அருளியதே ராமாவதாரத்தின் சிறப்பு. இறுதியாக, பெண் பித்து பிடித்து மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனுக்கு தக்க பாடம் புகட்டி அவனை வதம் செய்தார். தாய் மீது பாசம் வைத்த கோசலை ராமனாக, தந்தை மீது பக்தி வைத்த தசரத ராமனாக, வீரம் என்னும் வில்லை ஏந்திய கோதண்டராமனாக, ஏகபத்தினி விரதனாக வாழ்ந்த சீதாராமனாக எல்லாவற்றுக்கும் உதாரண புருஷனாக விளங்கியவன் ஸ்ரீஜெயராமன்.

ராம தரிசனத்தைவிட ‘ராம’ நாமத்துக்கு மகிமை அதிகம் என்பார்கள் ‘நாராயணா’ என்ற சொல்லில் இருக்கும் ‘ரா’ என்ற எழுத்தும், ‘நமசிவாய’ என்ற சொல்லில் இருக்கும் ‘ம’ என்ற எழுத்தும் சேர்ந்தே ‘ராம’ என்று கூறப்படுகிறது. ராம நாமம் சொல்லும் இடங்களில் எல்லாம் அவரது பக்தன் ஆஞ்சநேயன் இருப்பார் என்பது நம்பிக்கை. எனவே ஸ்ரீராமநவமி என்பது ராமருக்கு மட்டுமின்றி ஆஞ்சநேயருக்கும் விசேஷம்.

ராம பாணத்தைவிட ராம நாமம் சக்தி மிகுந்தது என்று நம்பி ராம நாமம் சொன்னவர் ஆஞ்சநேயர். வானர சேனைகள் ‘ராம’ நாமத்தை எழுதியும் ராம நாமம் ஜெபித்தபடியும் போட்ட கற்கள் கடலில் மிதந்தன. ராம நாமம் சொல்லி சக்தி பெற்று ஆஞ்சநேயர் கடலை தாண்டி சென்றார் என்கிறது புராணம்.
ஸ்ரீராமநவமியன்று ராமர் படம், ஆஞ்சநேயர் படத்துக்கு மாலை அணிவித்து ராம நாம ஜெபம் செய்து வழிபட்டு வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் நம்மை தேடி வரும்.

பிரசாதமாக பாயசம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், வடை, பானகம், நீர்மோர் படைத்து எல்லோருக்கும் வழங்கினால் சகல நலங்களும் சேரும் என்பது ஆன்றோர் வாக்கு. அன்றைய தினம் முழுவதும் ‘ஸ்ரீராமஜெயம்‘ எழுதலாம். சீதாராம அஷ்டோத்திரம் சொல்லலாம். ராமாயணம் படிக்கலாம். குறிப்பாக சுந்தர காண்டம் படிப்பது மிகவும் புண்ணியமாகும். கீழ்க்கண்ட பாடல் வரிகளை படிப்பது சிறப்பு.

‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென் றிரண்டெழுத்தினால்’

கிரக தோஷங்கள் நீக்கும் ஸ்ரீ ராமர் ஜனன ஜாதகம்

தசரத சக்கரவர்த்தி பக்தியுடன் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக பெருமாள் ஸ்ரீகோதண்டராமனாக இந்த பூமியில் அவதரித்தார். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் உச்சம் பெற்றும், சந்திரன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்கில் இருந்து ஆட்சி, வர்கோத்தமம் பெற்றும், நீதிமான் தர்மவான் சனீஸ்வரர் துலா ராசியில் உச்சம் பெற்றும், சந்திரனுக்கு கேந்திரத்தில் மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்றும், அழகு தேஜஸ் சகல சுகபோகங்களுக்கும் கர்த்தாவான சுக்கிரன் மீன ராசியில் உச்சம் பெற்றும், 12-ம் இடமான மோட்ச ஸ்தானத்தில் கேதுவும், ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் தனுசு ராசியில் கோதண்ட ராகுவாக இருப்பதும் ஜோதிட அம்சங்களின்படி மிகமிக புண்ணியம் மிக்க அமைப்பாகும். இந்த ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ராமநவமி அன்று நீர்மோர், பானகம்:

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.

ஜென்மச்சனி தொல்லை நீக்கும் ராமநவமி வழிபாடு:

ஸ்ரீராமபிரானை மனம் உருக வழிபட்டால் அவர் அருளால் குடும்பத்தில் கணவன்-மனைவி, பெற்றோர், குழந்தை, அண்ணன், தம்பி ஆகியவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்.

விக்ரஹம், பிரதிகை, படமானது அழகான ஸ்ரீராமர், தனது இடது பக்கத்தில் ஸ்ரீசீதாதேவியுடன் அமர்ந்து தனது வலது கையால் ஞான முத்திரை காண்பித்து இடது கையால் ஸ்ரீசீதாதேவியை அனைத்துக்கொண்டு வீர சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவராகவும், ஸ்ரீராமருக்கு இரண்டு பக்கங்களிலும் பரதரும்,

சத்ருக்னரும் வெண்சாமரம் வீசுபவர்களாகவும், அம்பு+வில்லுடன் ஸ்ரீ லட்சுமணரும் மற்றும் ஆஞ்சநேயருடன் இருக்கும் விக்ரகம் அல்லது படம் தான், தானம் தரவும் பூஜை செய்யவும் சிறந்தது. இவ்வாறான படமோ விக்ரகமோ கிடைக்காத பட்சத்தில், எந்த மாதிரியான ஸ்ரீ ராமர் படத்தையோ விக்ரகத்தையோ தானம் செய்யலாம்.

ஸ்ரீராம விக்ரகத்தை அல்லது படத்தை 9 நாட்களோ அல்லது ஒரே ஒரு நாளோ பூஜை செய்து ராம பக்தி உள்ளவருக்கு தானமாக கொடுக்கலாம். இதனால் ஸ்ரீராமரின் அருள் கிட்டும். ஒற்றுமை ஏற்படும். ஏழரை நாட்டு ஜென்மச்சனியின் தொல்லை போன்றவைகள் விலகும்.

நீண்ட ஆயுளும் மன நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப்பிரிந்தவர்கள் விரைவில் ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் விரைவில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum