தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகல சவுபாக்கியம் வழங்கும் வெள்ளிக்கிழமை விரத வழிபாடு

Go down

 சகல சவுபாக்கியம் வழங்கும் வெள்ளிக்கிழமை விரத வழிபாடு  Empty சகல சவுபாக்கியம் வழங்கும் வெள்ளிக்கிழமை விரத வழிபாடு

Post  ishwarya Mon Apr 29, 2013 1:58 pm

வார நாட்களில் விரதங்களுக்கு பிரசித்தி பெற்ற நாள் இதுவாகும். ஆறாம் நாளான இது சுக்ர வாரம் எனப்படும். ஆன்மிகம் சார்ந்த உலகில் பயன்பாடுகளை நெறிப்படுத்துபவர் தேவகுரு வியாழன் என்றால் உலகியல் வசதி வாய்ப்புகளையும் தேக சுக சவுகர்யகாரண காரியங்களையும் வாரி வழங்குபவர் அசுரகுருவான வெள்ளி எனப்படும் சுக்ரன் ஆவார்.

ஆங்கிலத்தில் க்ஷிணிழிஹிஷி எனப்படும். ஒருவரது பிறந்த நேரத்தில், வான வெளியான சூரிய மண்டலத்தில் அமையப்பெற்ற கிரகங்களின் முழுவட்டப் பாதையின் கோண அமைவுகள், பூமியில் ஒருவர் பிறந்த குறிப்பிட்ட இடத்திற்கு எந்த அமைப்பில் பலன்களை குறிப்பிட்டுக் காட்டுகின்றன என்பதே ஒவ்வொரு கிரகங்களுக்கான பலன்களாகும்.

இதில் நடைமுறை உலகின் அத்தியாவசியங்களான வீடு, மனை, வண்டி, வாகனம், ஆடைகள், ஆபரணங்கள், வெளிவட்டாரத்தின் சமூகத் தொடர்புகள், அது சார்ந்த தகவல்கள், மிக முக்கியமாக ஒருவருக்கு அமையும் கணவன் அல்லது மனைவி பற்றிய முக்கியமான செய்திகளை சுக்ரனே வெளிப்படுத்துவார்.

அதனால் 'வெள்ளிக்கிழமை வழிபாடு' என்பது சவுபாக்கியங்களை வாரி வழங்கும் என்பது மிகையானதன்று. ஆங்கிலத் தேதிகளான 6, 15, 24 ஆகிய தேதிகளிலும், ரிஷபம், துலாம், ஆகிய ராசிகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும், பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்த அனைவரும் சுக்ரனுடைய கிரக கதிர் வீச்சை விசேஷமாகப் பெற்றவர்களாவார்கள்.

வெண்மை நிறமே சுக்ரனுக்கு உரியதாகும். நல்ல வாசனைத் திரவியங்கள், அலங்காரங்கள், ஆடை அணிகலன்கள், சுத்தமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் சுக்ரனுடைய சாதகமான அலை இயக்கம் உள்ளது. மேற்கூறிய அனைத்திலும் அதீதமான அளவுகள் யாவும் சுக்ரனுடைய பாதகமான அலைவரிசை இயக்கத்தையும் அதனால் ஒருவருக்கு சிரமங்களும் ஏற்படும். சுக்ர வாரமான வெள்ளிக்கிழமையே 'வெள்ளி வழிபாடான' 'சுக்ர வார சாதனா'வுக்கு உகந்ததாகும். இந்த விரதத்தை கடைப் பிடிக்கும் முறைகள் வருமாறு:-

வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் மகாலட்சுமி நமது வீட்டின் தலைவாசலில் வந்து நிற்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் தன்னை வரவேற்று பூஜை செய்கிறார்களா? என்று மகாலட்சுமி எதிர்பார்ப்பதாக நம்பிக்கை உள்ளது. எனவே அந்த நேரமே அவளது பூஜைக்கு உகந்ததாகும்.

அந்த நேரத்தில் கதவு, கதவு நிலைகள் ஆகியவற்றைத் துடைத்து பொட்டிட்டு, வாயிலில் கோலமிட்டு, பூஜையறையில் மகாலட்சுமி அல்லது மீனாட்சி, காமாட்சி, புவனேஷ்வரி, ஆகிய சுபமங்கலமான தெய்வத்திருவுருவங்களை மலரிட்டு, நெய்தீபமேற்றி உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லி வழிபட்டு, பசும்பால் நைவேத்தியம் செய்து, இரவில் பால் பழம் மட்டும் அருந்தி விரதமிருந்து காலையில் குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு உணவு அருந்தலாம்.

இன்னொருமுறை சாஸ்த்ரோக்தமானது. காலையில் குளித்து முடித்து ஒருவேளை உணவருந்தி உபவாசமிருந்து மாலையில் மகாலட்சுமியின் திருவுருவத்தை செந்தாமரை மலரிட்டு அலங்கரித்து வட முகமாக அமர்ந்து 108 நாமாவளிகளைச் சொல்லி தூப, தீப, நைவேத்தியம் பூஜாக்ரமங்களைச் செய்து முடிக்கலாம். கூடுதலாக கலசம் வைத்து அலங்கரித்து பஞ்சோபசார பூஜை செய்து கலச நீரை வீட்டின் அஷ்ட திக்குகளுக்கும் தலை வாயிலுக்கும் மாவிலை கொண்டு தெளிக்கலாம்.

நமது தொழில் ஸ்தானங்களிலும் இம்முறையைக் கடைபிடிப்பதால் சிறந்த முறையில் தொழில் வளர்ச்சி உண்டாகும். ஜோதிட ரீதியாக சுக்ரன், கணவன்-மனைவியின் நெருக்கத்தை வெளிக்காட்டக் கூடியதாகும். இந்த சுக்ர வார பூஜையால் கணவன் மனைவி இடையில் ஒரு சுமூகமான உறவு நிலை நீடிக்கவும், கருத்து வேறுபாடுகள் விரைவில் மறையவும் நிச்சயமாக வாய்ப்பு ஏற்படும்.

மேற்கூறிய பூஜை முறைகளைக் குடும்ப ரீதியாகவோ, இடம், பொருள், காலம், தேசம் ஆகிய பல்வேறு கலி யுகக் குழப்பங்களாலோ ஒருவரால் செய்ய முடியாத நிலை இருந்தால் அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது. இதன்படி வெள்ளக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்த்ர தானம் செய்யலாம். அல்லது வெள் ளிக்கிழமையன்று ஏதாவது தாயார், அல்லது அம்பிகை சன்னதியில் இனிப்பான நைவேத்தியம் பொருட்களை அவர்களது செலவில் தந்து வரலாம்.

சுக்ர திசை அல்லது புக்தி நடப்பில் இருந்து ஒருவருக்கு நல்ல பலன்கள் இல்லாமல் இருந்தாலோ, முழுமையாக நடக்க வேண்டினாலோ, அவர் தமது மனைவியை, அல்லது கணவனை பரஸ்பர அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி வரவேண்டியது அவசியம்.

காரக வெளிப்பாட்டு காரண காரிய வகை நன்மைகள் யாவும், ஒருவருக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் வழியாகவே கிடைக்கும். எனவே கணவன்-மனைவிக்கு இடையே பரஸ்பர சுமூக உறவு அவசியம். சுக்ர வார வழிபாட்டால் அது கை கூடும். - ஸ்ரீ ஜானகிராம், சென்னை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum