தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ரீ வள்ளி-முருகன் திருமணம்

Go down

ஸ்ரீ -  ஸ்ரீ வள்ளி-முருகன் திருமணம் Empty ஸ்ரீ வள்ளி-முருகன் திருமணம்

Post  ishwarya Thu May 23, 2013 1:03 pm

சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும். இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது.

பௌர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார்.

அன்று சந்திரன் உச்ச பலம் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும். அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திருநட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும்.

அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் "சிதம்பர ரகசியம்.' தை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும்.

அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பௌர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும்.

அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளிஸ்ரீமுருகர் திருமணம் நடக்கும். அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.

வெயிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது நல்ல பலனை தரும். உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்ரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மயூரபதி ஸ்ரீ முருகன் ஆலயம் பேர்லின்
» kaluthavalai murukan kovil களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம்
»  சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி- 108
»  ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை ஸ்ரீ வித்யா மஹாஸௌபாக்ய மஹாமந்த்ர – உடன் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம பாராயண ஸம்பூர்ண முறை
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum