தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி- 108

Go down

 சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி- 108 Empty சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருப்புகழ் போற்றி- 108

Post  ishwarya Thu May 23, 2013 12:45 pm

1. அன்புதரு குறமங்கை வாழ்வாம்புயனே போற்றி
2. அன்னை விரும்பிய குறமானை அண்மிவிரும்பிய பெருமாளே போற்றி
3. அணிதழை உடுத்துலவு குறமகள் மணக்கும் ஆறுமுகவா போற்றி
4. அந்தண் வரையில் மங்கைமருவு மணவாளா போற்றி
5. அளிசேர் குழல்மேவு குறத்தியை அணைவோனே போற்றி
6. அமுதச் சொருபத்த குறத்தி மணங் கொள்வோனே போற்றி
7. அரிய கானக மேவு குறத்தி பத்தினி மணவாளா போற்றி
8. அபிராம நாயகி பரிபுர பாதச் சேகர போற்றி
9. அழகிளங் குறமானார் தேனார் மணவாளா போற்றி
10. அழகிய குறமகள் தார்வேய்ந்த புயனே போற்றி
11. ஆராத காதல் வேடர் மடமகள் கணவ போற்றி
12. ஆறிரு புயத்தில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா போற்றி
13. ஆறுமுகனே குறத்தி மணவாளா போற்றி
14. இளங்குறத்தி மிகுமாலொடு அன்பு வைத்த பெருமாளே போற்றி
15. எங்கள் மானின் மகிழும் நாயகா போற்றி
16. எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான் போற்றி
17. ஏனல் காத்த சிறுமியை வேடம் மாற்றி வழிபடும் இளையோன் போற்றி
18. ஒரு ஞானபத்தினியைத் திருமார் புறத்தழுவும் அயில்வேலா போற்றி
19. ஓவியம் எனத்திகழும் மேதகு குறத்தி திருவேளைக்காரனே போற்றி
20. ககன மேவுவாள் ஒருத்தி மணவாளா போற்றி
21. கலைவிற் கட்குற மகள் கேள்வா போற்றி
22. கானகக் குறமாதை மேவிய ஞான சொற்குமரா போற்றி
23. கானச் சிறுமானை நினைந்து ஏனற்புன மீது நடந்தவா போற்றி
24. காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே போற்றி
25. கான மடந்தை மணவாளா போற்றி
26. கான வேல் வேடர் கொடுகோவே போற்றி
27. கானவர் சிறுமியோடு உருகிய பெருமான் போற்றி
28. குணத்திற்கு சிறந்த மகராசி குறத்திக் கிசைந்த பெருமாளே போற்றி
29. குளிர்சாரல் வள்ளிமலை வாழும் கொடிகோவே போற்றி
30. குன்ற மறமான் ஆசை கூரும் நண்ப போற்றி
31. குன்றுறை குறமகள் மணவாளா போற்றி
32. குறத்தி தனக்கு மனப்ரிய முற்றிடு குமரேசா போற்றி
33. குறத்தியைக் கைப்பிடித்த பெருமானே போற்றி
34. குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா போற்றி
35. குறத்திருவை புணர் பொற்புய வீரா போற்றி
36. குறத்திருவுக்கு அமைவுற்ற மணிப்புயத்தனே போற்றி
37. குறத்தேன் மாது பங்கா போற்றி
38. குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே போற்றி
39. குறமகட்கு சித்தமும் வைத்துத் திரிவோனே போற்றி
40. குறமங்கை விரும்பிய தம்பிரானே போற்றி
41. குறநற்பாவை தாட்பணி கருணைய போற்றி
42. குறவர் இளவஞ்சி மருவும் அழகா போற்றி
43. குறவர் மாமகள் ஆசை தணிக்கும் திருமார்பா போற்றி
44. குறவர் தம்மகளை கருணையோடணையும் மணிமார்பா போற்றி
45. குறப் பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா போற்றி
46. குறமின் கொடிதோள் புணரும் குணபூதரனே போற்றி
47. குறமகள் தனை மணமருள்வோனே போற்றி
48. குறமகள் பாதம் போற்று பெருமாள் போற்றி
49. குறமகள் இங்கித மணவாளா போற்றி
50. குறமங்கை பங்கயம் வரநின்று கும்பிடும் பெருமாள் போற்றி
51. குறமான் மகிழ் முத்தமிழாகரனே போற்றி
52. குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் கணவா போற்றி
53. குறிஞ்சி அணங்கை மணந்தவா போற்றி
54. கொச்சைக் குறமகள் மெச்சித்தழுவிய திருமார்பா போற்றி
55. கொடியிடை பிடிநடைக் குறமகள் கணவா போற்றி
56. கோவைப் பாவை கூடப்பாடித் திரிவோனே போற்றி
57. சரசக் குறத்தி மணவாளா போற்றி
58. சித்திரமான குறத்திக் கணவா போற்றி
59. சீதப்பாத குறப் பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா போற்றி
60. சுகமோகினி வளிநாயகி மணவாளா போற்றி
61. சுந்தர ஞான மென் குறமாது கணவ போற்றி
62. சொருபக் குறத்தி மணவாளா போற்றி
63. சோதி வனசரி மணவாளா போற்றி
64. ஞானக் குறமானை மணந்தவா போற்றி
65. தண்குறமகள் பதமலர்ப் பணி மணவாளா போற்றி
66. தனி வனத்தினில் புனமறத்தியைத் தழுவு பொற்புய திருமார்பா போற்றி
67. தினை காக்கும் ஒண் கிளிதன் மணவாளா போற்றி
68. தினைகாவல் பத்தினி தோள் மேவும் உத்தம போற்றி
69. தினைப்புன மோகன மானை அணைவோனே போற்றி
70. தினைப்புன முனே நடந்து குறக்கொடியையே மணந்தவா போற்றி
71. தினை வனங் கிளிகாத்த சவுந்தரி கணவ போற்றி
72. தினை தரு வனமே மருவி குறமாதை அணைவோடா போற்றி
73. தீதிலா வஞ்சி சீதபாதம் படும் சேகரா போற்றி
74. தீரா குஹா குறத்தி மணவாளா போற்றி
75. தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா போற்றி
76. தெய்வ வள்ளி மையல் கொள்ளும் செல்வ பிள்ளை போற்றி
77. தேனார் மொழி வள்ளி நாயகா போற்றி
78. நற்புனந்தனில் வாழ்வளி நாயகி மணவாளா போற்றி
79. நிறை தினைகாவல் காத்த வள்ளி நாயகனே போற்றி
80. நினைவோர் சித்த மொடகலா மற்புகு நிழலாள் பத்தினி மணவாளா போற்றி
81. பாளைக் குழல் வள்ளி பதம் பணியும் வேளே போற்றி
82. பாகுகனி மொழி மாதுகுறமகளட் பாதம் வருடிய மணவாளா போற்றி
83. புனத்துக் காவல் கொள் குறமாதின் மணவாளா போற்றி
84. பைங்குறமாது மணக்குந் திருமார்பா போற்றி
85. பைம்புனக் கரும்பின் மணவாளா போற்றி
86. பொற்புன வெற்புமான் அணை மணிமார்பா போற்றி
87. மதுரித செஞ்சொல் குறமட மங்கை கணவ போற்றி
88. மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே போற்றி
89. மறமானுக்கு இச்சை மொழி கூறு நற்குமரேசா போற்றி
90. மறவர் வாணுதல் வேடை கொளும் பொற்புய வீரா போற்றி
91. மலையில் விளைந்த தினைகாவல் மயிலை மணந்த அயிலவ போற்றி
92. மான் உதவும் தனி மானை மணம் செய்த பெருமான் போற்றி
93. மா தினை விளைந்த கானக குறத்தி மணவாளா போற்றி
94. மான்விழி குறத்தி மணவாளா போற்றி
95. முக கமலப் புயத்து வளி மணவாளா போற்றி
96. முத்து வண்ண சித்ர வண்ண வல்லிமணவாளா போற்றி
97. மென் தோளி சித்ரவளி நாயகி கணவா போற்றி
98. மொய்தாரணி குழல் வள்ளியை வேட்டவ போற்றி
99. வடிப்ப மாதொரு குறப்பாவையாள் மகிழ்தருவேளே போற்றி
100. வளி நாயகி காமுறும் எழில்வேலா போற்றி
101. வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே போற்றி
102. விறன் மறவர் சிறுமிதிரு வேளைக்கார பெருமாளே போற்றி
103. வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா போற்றி
104. வேடர் மங்கைதனை நாடி வனமீது சென்றவா போற்றி
105. வேடுவர் அமுதாம் மயில் மணவாளா போற்றி
106. வேடுவர் பேதையின் வேடை கொண்ட பிரானே போற்றி
107. வேடர் குலமாதை மங்களமதாக அணைவோனே போற்றி
108. வரம் மிகுந்த சிறுவாபுரி வள்ளிமணவாளப் பிரான் போற்றி போற்றி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum